3 பிரதமர்களைக் காவு வாங்கிய லியாகத் அலி பாக்!
Subscribe to Oneindia Tamil
ராவல்பிண்டி: பெனாசிர் பூட்டோ படுகொலை செய்யப்பட்ட ராவல்பிண்டி, லியாகத் அலி பாக் பகுதிக்கு துயரமான ஒரு ராசி உண்டு. இதே இடத்தில்தான் பிரதமராக இருந்த 3 பேர் இதுவரை கொல்லப்பட்டுள்ளனர்.
ராவல்பிண்டி அருகே உள்ள இடம்தான் லியாகத் அலி பாக். இப்பகுதிக்கு முன்னாள் பிரதமர் லியாகத் அலிகானின் பெயர் சூட்டப்பட்டிருந்தது.
லியாகத் அலிகான் பிரதமராக இருந்தபோது 1951ம் ஆண்டு இதே பகுதியில்தான் படுகொலை செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து இப்பகுதிக்கு அவருடைய பெயர் சூட்டப்பட்டது.
1979ம் ஆண்டு இதே பகுதியில்தான் பெனாசிரின் தந்தை சுல்பிகர் அலி பூட்டோ, ஜியா அரசால் தூக்கிலிட்டுக் கொல்லப்பட்டார்.
இப்போது பெனாசிர் பூட்டோவும் இதே பகுதியில் நடந்த தாக்குதலில் உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications