23.5 கிலோ கேட்டமைன் பறிமுதல் - இளைஞர் கைது
Subscribe to Oneindia Tamil
திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் 23.5 கிலோ கேட்டமைன் ஊக்க மருந்துடன் வந்த ராமநாதபுரம் மாவட்ட இளைஞர் கைது செய்யப்பட்டார்.
கேட்டமைன் ஊக்க மருந்து போதைப் பொருளாக பயன்படுத்தப்படுவதால் அதை முறையான அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தவோ, வைத்திருக்கவோ தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் திருச்சி விமான நிலையத்திற்கு ராமநாதபுரம் மாவட்டம் இளையாங்குடியைச் சேர்ந்த மூசா என்பவர் கோலாலம்பூர் செல்வதற்காக வந்தார்.
அவரது உடமைகளை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது அதில் 23.5 கிலோ கேட்டமைன் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து அது பறிமுதல் செய்யப்பட்டது. மூசாவும் கைது செய்யப்பட்டார்.












Click it and Unblock the Notifications