தூத்துக்குடி, தஞ்சையையும் மாநகராட்சி ஆக்க பாமக கோரிக்கை
திருநெல்வேலி: திருப்பூர், ஈரோட்டைத் தொடர்ந்து தூத்துக்குடி, தஞ்சாவூரையும் மாநகராட்சிளாக அறிவிக்க வேண்டும் என்று பாமக தலைவர் ஜி.கே.மணி கோரிக்கை விடுத்துள்ளார்.
நெல்லை வந்த ஜி.கே.மணி இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில், திருப்பூர், ஈரோட்டை மாநகராட்சியாக்கியுள்ளதை வரவேற்கிறோம். அதுபோலவே, தூத்துக்குடி, தஞ்சாவூரையும் மாநகராட்சிகளாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோருகிறோம்.
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும். தமிழகம் தண்ணீர்ப் பற்றாக்குறை உள்ள மாநிலம். இதைக் கருத்தில் கொண்டு அரசு நீண்ட கால பாசனத் திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை.
இதுகுறித்து பொதுப்பணித்துறையின மூத்த மற்றும் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பொறியாளர்கள் குழுவை அமைத்து நீர்ப்பாசனத்திட்டங்கள் குறித்த மாஸ்டர் பிளானை அரசு தயாரிக்க வேண்டும்.
தமிழகத்தில் விடுதலைப் புலிகள் நடமாட்டம் எதுவும் இல்லை. அப்படி இருந்திருந்தால் அரசு உரிய நடவடிக்கை எடுத்திருக்கும் என்றார் மணி.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications