பிரதமர் இலங்கை போகக் கூடாது - திருமாவளவன் கோரிக்கை
சென்னை: இலங்கை சுதந்திர தின விழாவில் பங்கேற்க பிரதமர் மன்மோகன் சிங், அங்கு போகக் கூடாது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ஜனவரி 25ம் தேதி மொழிப் போர் தியாகிகள் நினைவு நாளில் சென்னையில் விடுதலை
சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கருத்துரிமை மீட்பு மாநாடு நடைபெறுகிறது. இதில் மனித உரிமை ஆர்வலர்கள் ஜனநாயக உணர்வாளர்கள் பங்கேற்கிறார்கள்.
ஈழ படுகொலையை கண்டிக்கவோ, இரங்கல் தெரிவிக்கவோ கூடாது என்று பாசிசம் கொண்டு கூக்குரலிடுகிறார்கள். தமிழகத்தில் அரசியல் ஆதாயத்துக்காக தொடர்ந்து இத்தகைய பிரசாரம் நடைபெறுகிறது.
ஈழ விடுதலைக்காகவோ, விடுதலைப் புலிகளுக்காகவோ கருத்துரிமை மீட்பு மாநாடு நடத்தப்படவில்லை.
முதல்வர் கருணாநிதியின் தூண்டுதலின் பேரில் தான் விடுதலை சிறுத்தைகள் அமைப்பினர் விடுதலைப் புலிகளை ஆதரிப்பதாக ஜெயலலிதா ஆதாரம் இல்லாத பொய் குற்றச்சாட்டுகளை சுமத்துவதை கைவிட வேண்டும். இவரின் குற்றச்சாட்டு வேதனைக்குரியது.
சிங்கள அரசின் 60வது ஆண்டு விழாவில் கலந்து கொள்ள பிரதமர் மன்மோகன்சிங்குக்கு அழைப்பு வந்துள்ளதாக தெரிகிறது. தமிழ் இன படுகொலையில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் சிங்கள இனவாத அரசு நடத்தும் விழாவில் பிரதமர் கலந்து கொள்ளக் கூடாது.
இதை வலியுறுத்தி சென்னையில் திராவிடர் கழகம் நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் நாங்கள் கலந்து கொள்வோம்.
சுனாமி மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு விரைந்து நிவாரணம் வழங்க வேண்டும். இல்லாவிட்டால் அதன் முடிவு வருகின்ற தேர்தலில் எதிரொலிக்கும் என்றார் திருமாவளவன்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications