விவசாயிகளின் நூதனப் போராட்டம்
திருச்சி: நெல்லுக்கு குறைந்த பட்ச ஆதாரத் தொகையாக ரூ. 1000 தர மறுத்து வரும் மத்திய அரசைக் கண்டித்து ஜனவரி 31ம் தேதி முதல் நெல் பயிரிடாமல் நூதனப் போராட்டத்தை நடத்த தமிழ்நாடு தோட்டப் பயிர் உற்பத்தியாளர் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.
இதுகுறித்து சங்கத்தின் தலைவர் புலியூர் நாகராஜன் திருச்சியில் வெளியிட்ட செய்திக்குறிப்பில், நெல்லுக்கு குறைந்த பட்ச ஆதரவு விலையாக ரூ. 1000 நிர்ணயிக்க வேண்டும் என நீண்ட நாட்களாக விவசாயிகள் கோரி வருகின்றனர். ஆனால் இதுவரை மத்திய அரசு இதில் எந்தவித அறிவிப்பையும் வெளியிடாமல் மெத்தனமாக இருந்து வருகிறது.
மத்திய அரசின் இந்தப் போக்கைக் கண்டித்து ஜனவரி 31ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் நெல் பயிரிடுவதை நிறுத்துவது, நில வரியைக் கட்டாமல் நிறுத்துவது, விவசாயக் கடன் பாக்கியை செலுத்தாமல் நிறுத்துவது ஆகிய போராட்டங்களை மேற்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து விவசாய சங்கங்களையும் ஒருங்கிணைத்து விவசாய ஒருங்கிணைப்புக் குழுவை அமைப்பது என்றும் அதன் மூலம் விவசாயிகளின் உரிமையைப் பெற போராடுவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
காவிரி நீரில் தமிழகத்திற்குரியப் பங்கைப் பெற தமிழக அரசு விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோருகிறோம் என்று அவர் கூறியுள்ளார்.
-
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
திருச்சி மேடையில் அதை பேசியிருக்கனும்.. முதல்வர் விஜய்யின் உரை ஏமாற்றம்! ஆதங்கப்பட்ட அன்புமணி -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications