கோலம் போடுவதில் தகராறு-பாமக பிரமுகர் கொலை !
Subscribe to Oneindia Tamil
திருத்தணி: திருத்தணி அருகே கோலம் போடுவதில் ஏற்பட்ட தகராறில் பாமக பிரமுகர் கொலை செய்யப்பட்டார்.
திருத்தணி அடுத்த கிருஷ்ணசமுத்திரம் பெறுகுமி கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகர். பாமக நகர செயற்குழு உறுப்பினர்.
இவர் குடும்பத்துடன் அரக்கோணம் சாலையில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். இவர் வீட்டு மாடியில் திருத்தணி பகுதியை சேர்ந்த ஏழுமலை என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி முனியம்மா, மகன் கிருஷ்ணன்.
இவர்கள் குடியிருக்கும் வீட்டு வாசலில் தண்ணீர் தெளித்து கோலம் போடுவதில் சந்திரசேகர் மனைவி லோகேஸ்வரிக்கும், ஏழுமலை மனைவி முனியம்மாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம்.
இந் நிலையில் நேற்று முன் தினமும் இருவருக்கும் இடையே காலையில் கோலம் போடுவதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. வாய் தகராறு முற்றி மோதல் ஏற்பட்டுள்ளது.
இரவு 9 மணி அளவில் இரு குடும்பத்தாருக்கும் இடையை மீண்டும் பிரச்சனை வெடித்துள்ளது. இதில் முனியம்மாவை சந்திரசேகர் தாக்கியுள்ளார். இதனால் முனியம்மாளின் மகன் கிருஷ்ணன் தனது நண்பர்களுடன் சேர்ந்து கிருஷ்ணனை தாக்கியுள்ளார்.
இதில் படுகாயமடைந்த சந்திரசேகருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது. சிகிச்சைக்காக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்து போனார்.
இது தொடர்பாக கிருஷ்ணன், அவரது தாயார் முனியம்மா ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த சம்பவத்தில் தெடர்புடைய கிருஷ்ணனின் நண்பர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications