பாகிஸ்தான் தேர்தல் பிப்ரவரி 18க்கு ஒத்திவைப்பு
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ படுகொலை செய்யப்பட்டதையடுத்து அந்நாட்டில் இம்மாதம் 8ம் தேதி நடக்கவிருந்த பொதுத் தேர்தல் தள்ளி வைக்கப்படுகிறது.
முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ படுகொலையால் பாகிஸ்தானே கொந்தளித்துக் கிடக்கிறது. இன்னும் கலவரம் அங்கு அடங்கவில்லை.
ஆயிரக்கணக்கான கார்கள் எரிக்கப்பட்டுள்ளன. பலர் உயிரிழந்துள்ளனர். தேர்தல் ஆணைய அலுவலகங்கள் தீவைத்து எரிக்கப்பட்டுள்ளன. பல்வேறு காவல் நிலையங்களும் தாக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து குழப்பமான சூழ்நிலையே நிலவுகிறது.
இந்த நிலையில் தேர்தலைத் திட்டமிட்டபடி ஜனவரி 8ம் தேதி நடத்துவது சாத்தியமில்லை என பாகிஸ்தான் அரசு தெரிவித்துவிட்டது.
அந்நாட்டின் தலைமை தேர்தல் ஆணையர் குசி முகம்மது பரூக் கூறியதாவது,
நாட்டில் கலவரம் அதிகரித்துள்ளதால் மக்கள் பெரும் அச்சத்திற்கு ஆளாகியுள்ளனர். அதனால் குறிப்பிட்ட ஜனவரி 8ம் தேதி பொதுத் தேர்தல் நடப்பது சாத்தியமில்லை.
கலவரம் முழுதும் ஓய்ந்த பின்னர் தான் தேர்தல் நடத்தப்படும். அதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது.
எனவே வரும் பிப்ரவரி 18ம் தேதி தேர்தல் நடத்தப்படும். தேர்தல் நடக்கும் தேதி நாட்டின் நிலவரத்தை பொறுத்து மாறலாம் எனவும் தெரிவித்தார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications