புத்தாண்டில் ஈவ் டீசிங் செய்த லாலு பிரசாத் மகன்களுக்கு தர்ம அடி
டெல்லி:புத்தாண்டுக் கொண்டாட்டத்தின்போது பெண்களை கேலி செய்ததாக சிக்கிய மத்திய ரயில்வே துறை அமைச்சர் லாலு பிரசாத் யாதவின் இரு மகன்களுக்கு தர்ம அடி விழுந்துள்ளது. அவர்களைக் காப்பாற்ற முயன்ற போலீஸ் அதிகாரியின் பிஸ்டலையும், அடித்தவர்கள் பறித்துக் கொண்டு சென்று விட்டனராம்.
தெற்கு டெல்லியில் உள்ள அசோகா ஹோட்டலில் நடந்த புத்தாண்டுக் கொண்டாட்ட நிகழ்ச்சிகளில் லாலுவின் மகன்களான தருண் யாதவ், தேஜ்பால் யாதவ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்போது அங்கு வந்த பெண்களை இருவரும் கேலி செய்ததாக தெரிகிறது. பின்னர் அங்கிருந்து கிளம்பிய இருவரும் கன்னாட் பிளேஸ் பகுதிக்குச் சென்று அங்கும் பெண்களைக் கிண்டல் செய்துள்ளனர்.
இத்தனைக்கும் அவர்களுக்குப் பாதுகாப்பாக சில போலீஸாரும் உடன் இருந்துள்ளனர். அவர்கள், இருவரையும் அடக்க வைக்க முயற்சிக்கவில்ைல என்று தெரிகிறது. லாலு மகன்கள் செய்த சேஷ்டைகளை வேடிக்கை பார்த்தவாறு உடன் இருந்துள்ளனர்.
இரு இடங்களிலும் கேலி செய்து முடித்த பின்னர் டெல்லி - ஹரியானா எல்லையில் உள்ள சத்தர்பூர் என்ற இடத்திற்கு இருவரும் வந்துள்ளனர். அங்கு நடந்த ஒரு பார்ட்டியில் பங்கேற்றனர்.
பார்ட்டியை முடித்துக் கொண்டு திரும்பி வரும் வழியில், மெஹ்ராலி பகுதியில் ஒரு பண்ணை வீட்டில் நடந்த பார்ட்டியைப் பார்த்து வண்டியை நிறுத்தி, பார்ட்டியில் கலந்து கொண்டு நடனமாடிய பெண்களைப் பார்த்து அசிங்கமாக காமென்ட் அடித்துள்ளனர்.
இதுவரைக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் கேலி செய்து வந்த அவர்களுக்கு மெஹ்ராலியில் வேறு விதமான வரவேற்பு கிடைத்தது. அங்கிருந்த சில இளைஞர்கள் ஒன்று திரண்டு லாலுவின் இரு மகன்களையும் சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர்.
நிலைமை மோசமடைவதைப் பார்த்த பாதுகாப்புக்கு வந்த போலீஸார், இளைஞர்களை விலக்கி விடப் பார்த்தனர். அப்போது அவர்களில் ஒருவரின் பிஸ்டலை, இளைஞர்கள் பறித்துக் கொண்டு அங்கிருந்து ஓடி விட்டனர்.
முகத்தில் ஏகப்பட்ட காயத்துடன் தருணும், தேஜ்பாலும், அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சென்று முதலுதவி சிகிச்சை எடுத்துக் கொண்டனர். பின்னர் இருவரும் பாதுகாப்புடன் வீடு போய்ச் சேர்ந்தனர்.
மெஹ்ராலி சண்டையில் பிஸ்டலை தொலைத்த போலீஸ்காரர், அதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
புத்தாண்டுக் கொண்டாட்டத்தின்போது லாலுவின் மகன்கள் ஈவ் டீசிங் செய்து அடி வாங்கிய சம்பவம் டெல்லி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு லாலுவின் மனைவியும், பீகார் முன்னாள் முதல்வருமான ராப்ரி தேவி, முதல்வர் நிதீஷ் குமார் வீடு அருகே காவலுக்கு இருந்த காவலரை கன்னத்தில் அடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். இப்போது அவரது மகன்கள் பெண்களை கேலி செய்து அடி வாங்கி வந்துள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications