அதிமுக கூட்டணி: தேசிய லீக் உடைந்தது
சென்னை: அதிமுகவுடன் இந்திய தேசிய லீக் கூட்டணி தொடர்வாத அக் கட்சியின் மாநிலத் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட பசீர் அகமது கூறியுள்ளார். இதன்மூலம் அதிமுகவுடன் கூட்டணி வைக்கும் விஷயத்தில் அந்தக் கட்சி இரண்டாக உடைந்துள்ளது.
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா பாஜகவுடன் நெருங்கி சென்று கொண்டிருப்பதால் இந்திய தேசிய லீக் கட்சி, அதிமுகவுடன் கொண்டிருந்த உறவை முறித்துக் கொண்டு விட்டதாக அக்கட்சியின் அகில இந்திய தலைவர் முகமது சுலைமான் நேற்று அறிவித்தார்.
மேலும் இந்திய தேசிய லீக் கட்சியின் தமிழ் மாநில அமைப்பை கூண்டோடு கலைத்தார். தலைவராக இருந்த பஷீர் அகமது, பொதுச் செயலாளர் அப்துல் காதர், பொருளாளர் ஜவஹர் அலி ஆகியோரை கட்சியை விட்டு நீக்கினார்.
இந் நிலையில் பசீர் அகமது வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது,
இந்திய தேசிய லீக் கட்சி அதிமுகவுடன் நல்லதொரு உறவைக் கொண்டுள்ளது. இந்த கூட்டணியை களங்கப்படுத்த வேண்டும் என்பதற்காக கட்சியிலிருந்து நீக்கி வைக்கப்பட்டுள்ள முன்னாள் அகில இந்திய தலைவர் சுலைமான் அதிமுகவுடன் இந்திய தேசிய லீக் உறவு இல்லை எனக் கூறி வருகிறார்.
சுலைமான் மற்றும் அவரது தரப்பினருக்கும் இந்திய தேசிய லீக்கிற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. இவர்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை. அதிமுகவுடன் சிறுபான்மை இஸ்லாமிய மக்களின் நட்பும், ஆதரவும் இந்திய தேசிய லீக்கின் கூட்டணியும் தொடர்கிறது என்று கூறியுள்ளார்.
இதற்கிடையே, இந்திய தேசிய லீக் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சர்வார் கான் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்பட்ட சுலைமான் கட்சியிலிருந்து 3 வருடங்களுக்கு நீக்கி வைக்கப்பட்டுள்ளார். அவர் மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது. பசீர் அகமது புதுச்சேரியில் கடந்த டிசம்பர் மாதம் 2ம் தேதியன்று கூடிய அகில இந்திய கட்சி கூட்டத்தில் அகில இந்திய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என கூறியுள்ளார்.
-
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications