அக்ஷ்ர்தம் கோவிலுக்கு தீவிரவாத மிரட்டல்
டெல்லி: கின்னஸ் சாதனை நூலில் சமீபத்தில் இடம் பிடித்த, டெல்லியில் உள்ள புகழ் பெற்ற அக்ஷ்ர்தம் கோவிலை குண்டு வைத்துத் தகர்க்கப் போவதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளதால், கோவிலின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
காஷ்மீரைச் சேர்ந்த சில தீவிரவாதிகள் அக்ஷ்ர்தம் கோவிலை குண்டு வைத்துத் தகர்க்க திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறைக்குத் தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து கோவிலின் உள்ளேயும், வெளியேயும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
குடியரசு தினம் நெருங்கி வரும் நிலையில் டெல்லியில் பெரும் பீதியையும், குழப்பத்தையும் ஏற்படுத்தும் நோக்கில் இந்த சதித் திட்டம் தீட்டப்பட்டிருப்பதாக கருதப்படுகிறது.
கோவிலில் மட்டுமல்லாது டெல்லியிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
உலகிலேயே மிகப் பெரிய இந்துக் கோவில் என்ற பெருமையுடன் சமீபத்தில்தான் அக்ஷ்ர்தம் கோவில் கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications