புதிய சாலைகள் போட - பாலம் கட்ட ரூ. 222 கோடி ஒதுக்கீடு
சென்னை: தமிழகத்தில் 358 பஞ்சாயத்து மற்றும் பஞ்சாயத்து யூனியன்களில் 910 கிலோமீட்டர் தொலைவுக்கு கிராம சாலைகள் போடவும், 49 பாலங்களைக் கட்டவும் ரூ. 222 கோடி நிதியை முதல்வர் கருணாநிதி ஒதுக்கி உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நபார்டு வங்கியின் நிதியுதவியுடன் 219 கிராமப்புற சாலைகளும், 32 பாலங்களும் அமைக்கப்படும்.
இந்த சாலைத் திட்டத்தின் கீழ் ஊரகப் பகுதிகளில் பஸ் போக்குவரத்துக்காக போடப்பட்ட 64 சாலைகள் மேம்படுத்தப்படும். இப்பகுதிகளில் புதிதாக ரூ. 41.50 கோடி மதிப்பில் 11 புதிய பாலங்கள் கட்டப்படும்.
இதுதவிர ஆதி திராவிட குடியிருப்புகளை இணைக்கும் வகையில், 75 சாலைகள் போடப்படும். 11 பாலங்களும் கட்டப்படும். இப்பணிக்காக ரூ. 36.24 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
மொத்தமாக, 358 பஞ்சாயத்துக்கள், பஞ்சாயத்து யூனியன்களில் 910 கிலோமீட்டர் தொலைவு கொண்ட சாலைகள் போடப்படும். 49 பாலங்கள் கட்டப்படும்.
இந்தப் பணிகளை விரைவில் முடிக்குமாறும் முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
வேளச்சேரி ஷாக்.. பாட்டியுடன் சென்ற 4 வயது குழந்தை பட்டப்பகலில் காரில் கடத்தல்.. இறுதியில் ட்விஸ்ட்! -
பெங்களூரு, மும்பை எல்லாம் ஓரம் போ.. சம்பள உயர்வு அதிகம் கொடுப்பதில் இந்த சிட்டிதான் டாப்! -
சென்னை முழுக்க மினி மால்.. அடி தூள்.. இனி வீட்டு பக்கத்திலேயே ஷாப்பிங், தியேட்டர், ஆபீஸ்! -
சென்னையில் சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்து.. தாம்பரம் அருகே பரபரப்பு -
நள்ளிரவு ‘பவர் கட்’.. சென்னையில் தொடர் மின்தடைக்கு பின்னணியில் இருக்கும் 3 ‘ஷாக்’ காரணங்கள்! -
1 BHK வீடு கட்டும் செலவில் கட்டிமுடிக்கப்பட்ட எழும்பூர் ரயில் நிலையம்.. இப்போ புத்தம் புதுசா மாறப்போகுது! -
சென்னை மக்களே! ரேஷன் அட்டையில் திருத்தம் செய்யணுமா? செம சான்ஸ்.. இன்னைக்கு மிஸ் பண்ணாதீங்க! -
4 மணி நேர மின்வெட்டு.. சென்னை ஆவடியில் கொந்தளித்த மக்கள்! சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு! -
சர்க்கரை அட்டை உங்களிடம் இருக்கா? சென்னை மக்களுக்கு ஒரே நாளில் பெயர் மாற்றத் தீர்வு தரும் தமிழக அரசு -
பெங்களூருக்கு வேட்டு! இந்தியாவிலேயே அதிக சம்பள உயர்வு கிடைக்கும் நகரம் எது தெரியுமா? -
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
தாமிரபரணி ஆற்றில் ஜாலியோ ஜாலி.. ட்ரோன் கேமராவில் சிக்கிய நவத்திருப்பதி யானைகள்












Click it and Unblock the Notifications