முஸ்லீம்களிடம் தஸ்லிமா மன்னிப்பு கேட்க தாஸ் முன்ஷி கோரிக்கை

மால்டா: இந்தியாவில் உள்ள முஸ்லீம்களிடம், தனது சர்ச்சைக்குரிய எழுத்துக்களுக்காக தஸ்லிம் நஸ்ரின் இரு கரங்களையும் கூப்பி, தலை வணங்கி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மத்திய செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரியரஞ்சன் தாஸ் முன்ஷி கூறியுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், இது பல மதங்களைக் கொண்ட, பல இனங்களைக் கொண்ட நாடு. இங்கு அனைத்து மதங்களும் மதிக்கப்படுகின்றன.
எனக்கு இலக்கியம் பிடிக்கும். தஸ்லிமா நஸ்ரினின் எழுத்தை நான் வெறுக்கவில்லை. ஆனால், ஒரு மத்ததின் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் அவரது எழுத்துக்கள் இருந்தால், அவமதிக்கும் வகையில் இருந்தால் அதை அனுமதிக்க முடியாது.
அவரது நூலில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் தேவையற்றவை. சல்மான் ருஷ்டியின் நூல் சர்ச்சைக்குரியதாக இருந்ததால், அதை இந்தியாவில் விற்பனை செய்ய அனுமதிக்கவில்லை.
எனவே தனது சர்ச்சைக்குரிய எழுத்துக்களுக்காக இந்திய முஸ்லீம்களிடம், இரு கரம் கூப்பி, தலை வணங்கி தஸ்லிமா மன்னிப்பு கேட்க வேண்டும். அந்த நூலிலிருந்து சர்ச்சைக்குரிய பகுதிகளை நீக்க வேண்டும்.
மேற்கு வங்கத்திற்கு மீண்டும் தஸ்லிமா திரும்புவது குறித்து நான் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. இது மேற்கு வங்க அரசின் தலைவலி.
ஆனால் இந்தியாவிலோ அல்லது வேறு ஏதாவது நாட்டிலோ தஸ்லிமா தங்க விரும்புவாரேயானால், முதலில் அந்த நாட்டின் அடையாளம், தத்துவம் ஆகியவற்றை மதிக்க கற்றுக் கொள்ள வேண்டும் என்றார் முன்ஷி.
மத்திய அரசின் பாதுகாப்பில் டெல்லியில் ஒரு ரகசிய இடத்தில் தஸ்லிமா தங்க வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் தனது நண்பர்களுக்கு தஸ்லிமா அனுப்பிய கடிதத்தில், தான் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், மிகுந்த மன உளைச்சலில் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் முன்ஷி படு காட்டமாக தஸ்லிமா குறித்து கருத்து கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications