கிரிக்கெட் சர்ச்சை-கருத்து தெரிவிக்க மன்மோகன் மறுப்பு
Subscribe to Oneindia Tamil
டெல்லி: ஆஸ்திரேலியாவில் இந்திய கிரிக்கெட் அணி சந்தித்துள்ள சர்ச்சை குறித்து கருத்து தெரிவிக்க பிரதமர் மன்மோகன் சிங் மறுத்து விட்டார்.
மத்திய அரசின் தலைமை தணிக்கை கட்டுப்பாட்டு அதிகாரியாக வினோத் ரய் இன்று பதவியேற்றார். இதுதொடர்பான நிகழ்ச்சி ராஷ்டிரபதி பவனில் நடந்தது.
இதில் கலந்து கொள்ள வந்த பிரதமரிடம், ஆஸ்திரேலிய கிரிக்கெட் சர்ச்சை குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, அதுகுறித்து எனக்கு சரிவர தெரியவில்லை. எனவே விவரம் என்ன என்று தெரியாமல் கருத்து சொல்வது சரியாக இருக்காது என்று கூறி கருத்து தெரிவிக்க மறுத்து விட்டார்.
தொடர்ந்து செய்தியாளர்கள் கேட்டபோது, மத்திய அமைச்சர் சரத்பவார்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர். எனவே அவர் அனைத்தையும் பார்த்துக் கொள்வார் என்றார் பிரதமர்.












Click it and Unblock the Notifications