திருடனை சரமாரியாக அடித்து, கண்களில் ஆசிட் ஊற்றிய கொடூரம்
ஜல்பைகுரி: மேற்கு வங்க மாநிலம் ஜல்பைகுரி மாவட்டத்தில் பாக்கு திருடிய திருடனைப் பிடித்த ஊர் மக்கள் அவரை சரமாரியாக அடித்தனர். பின்னர் ஜீப்பில் கட்டி சுமார் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு இழுத்துச் சென்றனர். அப்படியும் ஆத்திரம் தீராமல் திருடனின் கண்களில் ஆசிட் ஊற்றிக் கொடுமைப்படுத்தினர். தற்போது அந்த நபர் என்ன ஆனார் என்பது தெரியவில்லை.
ஜல்பைகுரி மாவட்டம், தெற்கு பல்லகுரி கிராமத்தில், சந்தோஷ் ரய் (26) என்ற வாலிபர் ஒரு கடையில் பாக்கு திருடியுள்ளார். இதைப் பார்த்த கிராமத்தினர் சந்தோஷை வளைத்துப் பிடித்து சரமாரியாக அடித்தனர்.
பின்னர் ஒரு ஜீப்பில் கட்டி, 2 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள பஞ்சாயத்து அலுவலகத்திற்கு தரதரவென இழுத்துச் சென்றனர். பின்னர் அங்கு வைத்தும் சந்தோஷை சரமாரியாக அடித்தனர். அப்படியும் ஆத்திரம் தீராமல், அவரது இரு கண்களிலும் ஆசிடை ஊற்றியுள்ளனர்.
அதன் பிறகு அவர் என்ன ஆனார் என்பது தெரியவில்லை. அனேகமாக அவர் உயிரிழந்திருக்கக் கூடும் எனத் தெரிகிறது.
பீகாரில் கடந்த ஆண்டு இதேபோல ஒரு திருடனை, பாகல்பூர் என்ற இடத்தில் சரமாரியாக அடித்து, 2 போலீஸார் தங்களது மோட்டார் சைக்கிளில் கட்டி இழுத்துச் சென்ற சம்பவம் நினைவிருக்கலாம். அந்த நபர் பின்னர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த நிலையில் ஜல்பைகுரியில் இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்து சந்தோஷின் சகோதரர் போலீஸில் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரில் கடைசியாக தனது சகோதரரை ஒரு கும்பல் தோர்ஷா ஆற்றுப் பக்கம் கொண்டு சென்றதைப் பார்த்ததாக தெரிவித்துள்ளார்.
இந்தப் புகாரின் அடிப்படையில் போலீஸார் விசாரணையில் இறங்கியுள்ளனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications