சிலை வைக்க ஆடு, பிரியாணி, டிவி லஞ்சம்: இன்ஸ்பெக்டர் டிரான்ஸ்பர்
சாத்தான்குளம்: தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே, காமராஜர் சிலை அமைக்க அனுமதி தருவதற்கு, ஆட்டுக் குட்டி, பிரியாணி, கலர் டிவி ஆகியவற்றை லஞ்சமாக வாங்கிய சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் அதிரடியாக மாற்றப்பட்டார்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள பேய்குளத்தில் காமராஜர் வெண்கல சிலை அமைக்க முடிவு செய்து அதற்கான குழுவும் அமைக்கப்பட்டது. இதன் அமைப்பாளராக ஸ்டாலின் என்பவர் செயல்பட்டு வந்தார்.
சிலை அமைப்பதற்கு முறைப்படி அனுமதி கேட்டு மாவட்ட கலெக்டர் மற்றும் எஸ்பிக்கு மனு செய்திருந்தனர். அது குறித்து விசாரித்து அனுமதி வழங்கும்படி சாத்தான்குளம் போலீசாருக்கு அவர்கள் உத்தரவிட்டனர்.
ஆனால் காமராஜர் சிலை வைக்க இன்ஸ்பெக்டர் அனுமதி தராமல் இழுத்தடித்தாக தெரிகிறது. சிலை அமைப்பு குழுவினரிடம் 2 ஆட்டு குட்டிகள் கேட்டதாகவும், தினமும் பிரியாணி அனுப்பி வைக்கும்படி கேட்டதாகவும், கலர் டிவி தருமாறும் அவர் கூறியதாக தெரிகிறது.
இதுகுறித்து சிலை அமைப்பாளர் ஸ்டாலின் கலெக்டர், தொகுதி எம்எல்ஏ, தாசில்தார் ஆகியோர் உள்பட 7 பேருக்கு புகார் மனு அனுப்பினார்.
இதையடுத்து சாத்தான்குளம் டிஎஸ்பி காந்தி விசாரணை நடத்தினார். விசாரணையில் புகார் உண்மை என்று தெரிய வந்ததால், இன்ஸ்பெக்டர் பிரவின்குமார் அதிரடியாக கயத்தாறுக்கு மாற்றப்பட்டார். இதுபோல் அதே ஸ்டேஷனில் பணியாற்றிய எஸ.ஐக்கள் கலா, வேணுகோபால் ஆகியோர் மசார்பட்டிக்கும், செல்வன் முத்தையபுரம் காவல் நிலையத்துக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
வினோதமான லஞ்சம் கேட்டு டிரான்ஸ்பர் ஆன இவர்கள் குறித்து தூத்துக்குடி காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பு நிலவுகிறது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications