ஓசூர் அருகே ஆற்றுக்குள் பாய்ந்த லாரி: 2 பேர் பலி
ஓசூர்: ஓசூர் அருகே சாலையோரம் பழுதாகி நின்று கொண்டிருந்த லாரி மீது மோதிய மற்றொரு லாரி, கட்டுப்பாட்டை இழந்து ஆற்றுக்குள் பாய்ந்ததில் ஓட்டுநரும், கிளீனரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
சென்னையிலிருந்து ஓசூர் நோக்கி வந்து கொண்டிருந்த கண்டெய்னர் லாரி ஓசூர் அருகேயுள்ள பேரண்டஅள்ளியில் உள்ள தென்பெண்ணை ஆற்றுப் பாலத்தை நெருங்கிய போது பழுதாகி நின்றுவிட்டது.
பின்னர் லாரியை பழுது பார்த்துவிட்டு புறப்பட தயாராக இருந்தபோது, சேலத்திலிருந்து பெங்களூர் நோக்கி வந்து கொண்டிருந்த ஒரு லாரி தென்பெண்ணை ஆற்றுப்பாலத்தை நெருங்கிய போது, கண்டெய்னர் லாரி மீது பலமாக மோதியது.
இதில் அந்த லாரி தறிகெட்டு ஓடி பாலத்தின் தடுப்புகளை இடித்து தள்ளி விட்டு நேராக ஆற்றுக்குள் பாய்ந்தது. கண்டெய்னர் லாரியும் சாலையோரம் கவிழ்ந்தது.
ஆற்றுக்குள் பாய்ந்த லாரியில் இருந்த திண்டிவனத்தை சேர்ந்த டிரைவர் பாபு (30), புதுச்சேரியை சேர்ந்த கிளீனர் அய்யனார் (38) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கண்டெய்னர் லாரியின் டிரைவர் காயங்களுடன் உயிர் தப்பினார்.
தகவல் அறிந்த போலீசார், கிரேன்களுடன் வந்து ஆற்றுக்குள் விழுந்த லாரியை மீட்டு, டிரைவர் மற்றும் கிளீனரின் உடல்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications