பெண் கேட்டவரை ஆசிட் ஊற்றி கொன்ற 3 பேருக்கு ஆயுள்
வேலூர்: வேலூர் அருகே பெண் கேட்டு வந்த வாலிபர் மீது குடும்பத்தோடு சேர்ந்து ஆசிட் ஊற்றிக் கொலை செய்த 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
வேலூர் மாவட்டம் திருவலம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் நிர்மல். இவர் அதே ஊரைச் சேர்ந்த லாவண்யா என்ற பெண்ணைத் திருமணம் செய்ய எண்ணினார்.
இதையடுத்து லாவண்யாவின் வீட்டுக்குப் பெண் கேட்டுச் சென்றார். அதைக் கேட்டு ஆத்திரமடைந்த லாவண்யாவின் தந்தை ஜெயராமன், அவரது மனைவி, மகன் ஆகியோர் நிர்மலை சரமாரியாக அடித்து உதைத்தனர். பின்னர் அவர் மீது ஆசிட் ஊற்றினர்.
இதில் படுகாயம் அடைந்த நிர்மல், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து போலீஸார் 3 பேரையும் கைது செய்து வேலூர் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், 3 பேருக்கும் ஆயுள் தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தது.












Click it and Unblock the Notifications