இந்தியத் தொழிலாளர்களுக்கு தடை ஏதும் இல்லை: மலேசியா

இந்தியாவிலிருந்து ஆட்களை பணியமர்த்த மலேசிய அரசு தடை விதித்துள்ளதாக வெளியாகியுள்ள செய்திகளை அந்நாட்டு அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது. அதுபோன்ற உத்தரவு ஒருபோதும் பிறப்பிக்கப்படவில்லை என்றும் அது விளக்கியுள்ளது.
இந்தியா மற்றும் வங்கதேசத்திலிருந்து எந்த வகையான தொழிலாளர்களையும் இனிமேல் பணியமர்த்துவதில்லை. தற்போது பணியாற்றி வருவோருக்கான ஒர்க் பெர்மிட் முடிந்தவுடன் அவை புதுப்பிக்கப்பட மாட்டாது என்ற முடிவை மலேசிய அரசு எடுத்துள்ளதாக நேற்று செய்தி வெளியானது.
இந்த செய்தியை மலேசிய உள்துறை அமைச்சர் ரட்ஸி ஷேக் அகமது இன்று திட்டவட்டமாக மறுத்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், முதலில் இதுபோன்ற எந்த உத்தரவையும், முடிவையும் அரசு எடுக்கவில்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். இந்தியாவிலிருந்து இனிமேல் யாரையும் பணிக்கு அமர்த்தக் கூடாது என்று எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
இப்படிப்பட்ட செய்தி எங்கிருந்து வந்தது என்று தெரியவில்லை. இந்த செய்தியால் மலேசிய அரசு அதிர்ச்சி அடைந்துள்ளது என்றார் அவர்.
இதற்கிடையே, இந்தியாவிலிருந்து மலேசியாவுக்கு வரும் தொழிலாளர்களை முறைப்படுத்த இந்தியா, மலேசியா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட வேண்டும் என இந்திய அரசிடம் மலேசியா தெரிவித்துள்ளதாம்.
இதுகுறித்து மலேசிய பயணத்தை முடித்து விட்டு தாயகம் திரும்பியுள்ள மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி கூறுகையில், மலேசியாவில் பணியாற்றும் இந்தியத் தொழிலாளர்களின் நலன் மற்றும் இந்தியாவில் வசிக்கும் மலேசிய மக்களின் நலன் ஆகியவற்றை பாதுகாக்கும் வகையிலான இந்த ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாக வேண்டும் என மலேசியா விரும்புகிறது.
எனது மலேசியப் பயணத்தின்போத நான் அந்த நாட்டு பிரதமர் மற்றும் வெளியுறவு அமைச்சரை சந்தித்தபோது இதுகுறித்த பேச்சு வந்தது.
மலேசியத் தலைவர்களுடனான எனது பேச்சுவார்த்தை உபயோகரமானதாக இருந்தது.
இந்தியத் தொழிலாளர்களுக்கு தடை விதிக்கப்படுவதாக எந்தத் தகவலையும் மலேசிய அரசு என்னிடம் தெரிவிக்கவில்லை என்றார் அவர்.
டத்தோ சாமிவேலு மறுப்பு:
முன்னதாக, டெல்லியில் நேற்று தொடங்கிய வெளிநாட்டு இந்தியர்கள் தின கொண்டாட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்த மலேசிய தொழில் அமைச்சர் டத்தோ சாமிவேலுவிடம் செய்தியாளர்கள் தடை தகவல் குறித்துக் கேட்டபோது, இதுகுறித்து அறிந்தவுடன் உடனடியாக பிரதமர் படாவி, உள்துறை அமைச்சக செயலாளர் ஆகியோருடன் பேசினேன். ஆனால் அப்படி எந்தத் தடையும் விதிக்கப்படவில்லை என்று அவர்கள் மறுத்து விட்டனர்.
இந்த செய்தி உண்மை இல்லை. அப்படி நடக்கவும் நடக்காது. இந்தியத் தொழிலாளர்களுக்கு எப்போதும் போல மலேசியாவில் வரவேற்பு காத்திருக்கிறது என்றார்.
மலேசிய அரசின் இந்த விளக்கத்தால், இந்தியத் தொழிலாளர்களுக்குத் தடை என்ற செய்திக்கு தெளிவு கிடைத்துள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications