போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு பொங்கல் போனஸ்
சென்னை: தமிழக அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,
தமிழக அரசின் போக்குவரத்துக் கழகங்கள், தமிழ்நாடு போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனம், பல்லவன் போக்குவரத்து ஆலோசனை பணிக்குழு ஆகியவற்றில் வேலை பார்க்கும் பணியாளர்களுக்கு ஆண்டு தோறும் வழங்கப்படும் செயல்திறன் ஊக்கத் தொகை, கடந்த கால ஆட்சியில் 5 வருடங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
அதை கடந்த வருடம் முதல் முதல்வர் கருணாநிதியின் உத்தரவின் பேரில் வழங்கப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து இந்த ஆண்டும் 91 நாட்கள் முதல் 150 நாட்கள் வரை பணிபுரிந்த பணியாளர்களுக்கு ரூ.85 வீதமும், 151 நாட்கள் முதல் 200 நாட்கள் வரை பணிபுரிந்த
பணியாளர்களுக்கு ரூ.195 வீதமும், 200 நாட்களுக்கு மேல் பணிபுரிந்த பணியாளர்களுக்கு ரூ.625 வீதமும் செயலாக்க ஊக்கத் தொகையாக வழங்கப்படும்.
இதன் மூலம் 1 லட்சத்து 264 பணியாளர்கள் பயன் பெறுவார்கள். இதனால் அரசுக்கு ரூ.7 கோடி கூடுதலாக செலவாகும். இந்த ஊக்கத் தொகை நாளையே அனைத்து தொழிலாளர்களுக்கும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications