சாமி பட பிரேமுக்குள் பதுக்கி கேட்டமன் கடத்தல்
சென்னை: சாமி படங்களின் போட்டோ பிரேமுக்குள் வைத்து மலேசியாவுக்குக் கடத்தப்படவிருந்த ரூ. 30 லட்சம் மதிப்புள்ள கேட்டமைன் ஹைட்ரோகுளோரைடை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சென்னை விமான நிலையத்தில் இன்று சுங்கத்துறை அதிகாரிகள், ஒரு பார்சலை சோதித்தனர். அதில் சாமி படங்கள் இருந்தன. அந்தப் படங்களைப் பார்த்த அதிகாரிகள், போட்டோ பிரேமுக்குள் 6 பொட்டலம் கேட்டமைன் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதைப் பார்த்து அதிர்ந்தனர்.
தி.நகரைச் சேர்ந்த சங்கரபாண்டியன் என்பவர் இந்த பார்சலை அனுப்பியதாக அதில் எழுதப்பட்டிருந்தது.
ஆனால் அந்த முகவரியில் போலீஸார் விசாரணை செய்தபோது அந்தப் பெயரில் யாரும் இல்லை என்பது தெரிய வந்தது.
அதில் இருந்த கேட்டமைன் 3 கிலோ எடை கொண்டதாகவும், சர்வதேச மதிப்பில் இது ரூ. 30 லட்சம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
350 அழகுமீன்கள் பறிமுதல்:
இதேபோல, பயணி ஒருவரின் பெட்டியிலிருந்து 350க்கும் மேற்பட்ட அழகு மீன்களை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
விமான நிலையத்திற்கு வந்த பயணி ஒருவர் சந்தேகத்துக்கிடமாக நின்று கொண்டிருந்தார். சந்தேகம் அடைந்த சுங்க இலாகா அதிகாரிகள் அவரை தனியாக அழைத்து சென்று அவரிடமிருந்த பெட்டிகளை சோதனை செய்தனர்.
அப்போது அந்த பெட்டிகளில் அதில் 350க்கும் மேற்பட்ட 35 வகையான வண்ண மீன்கள் இருந்தது கண்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அதிகாரிகள் அதனை பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்த மீன்களை வண்டலூர் வனவிலங்கு பூங்கா அதிகாரிகளிடம் சுங்க இலாகா அதிகாரிகள் ஒப்படைத்தனர்.
அழகுக்காகவும், ராசிக்காகவும் வீடுகளில் வளர்க்கப்படும் இந்த மீன்கள் வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டு அங்கு ரூ.100 முதல் ரூ.1000 வரை விற்கப்படுகிறது.
இந்த மீன்கள் ராமநாதபுரம், ராமேஸ்வரம் கடல்பகுதிகளில் பிடிக்கப்பட்டு கடத்தப்படுவதாக அதிகாரிகள் கூறினர்.
-
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன?












Click it and Unblock the Notifications