கோவில் காவலாளியை கொன்று உண்டியல் பணம் கொள்ளை
ஜெயங்கொண்டம்: ஜெயங்கொண்டம் அருகேயுள்ள முனீஸ்வரர் கோவிலில் காவலாளியைக் கொலை செய்து உண்டியல் பணத்தை கொள்ளை அடித்தவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
சென்னை-கும்பகோணம் சாலையில் ஜெயங்கொண்டம் அருகில் உள்ள சொக்கலிங்கபுரத்தில் முனீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சொக்கலிங்கபுரத்தை சேர்ந்த அறிவழகன் (50) என்பவர் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார்.
தற்போது மார்கழி மாதம் என்பதால் தினந்தோறும் அதிகாலையிலும், லையிலும் கோவிலில் பூஜை நடத்தப்பட்டு வருகிறது. நேற்றிரவு வழக்கம் போல் பூஜைகள் முடிந்த பின்னர் கோவிலை பூட்டிவிட்டு வாட்ச்மேன் அறிவழகன் கோவில் கருவறை முன்பாக தூங்கிக் கொண்டிருந்தார்.
இந்த நிலையில் இன்று அதிகாலை கோவிலுக்குள் புகுந்த சில மர்ம நபர்கள், அங்கிருந்த சூலாயுதத்தால் அறிவழகனை குத்தி கொலை செய்துவிட்டனர். பின்னர் உண்டியலில் இருந்த பணத்தை கொள்ளையடித்துவிட்டு தப்பி சென்றுவிட்டனர்.
இன்று அதிகாலையில் கோவிலுக்கு பூஜை செய்ய தினகரன் என்பவர் சென்றபோது அறிவழகன் ரத்தவெள்ளத்தில் பிணமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்து போலீசுக்கு தகவல் கொடுத்தார்.
தகவல் அறிந்த போலீசார் மோப்பநாய்களுடன் விரைந்து வந்து சோதனை நடத்தினர். கோவில் மெயின் ரோட்டில் இருப்பதால் கொள்ளையர்கள் மிக எளிதாக தப்பி சென்றிருக்கலாம் என தெரிகிறது.
இந்த கோவில் மிகச் சிறியது. வருமானம் கிடையாது. ஆனால் கொள்ளையர்கள் அதிகளவில் பணம், நகை இருக்கும் என்ற எண்ணத்தில் காவலாளியைக் கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகித்துள்ளனர். மேலும் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி












Click it and Unblock the Notifications