'டாக்' ரவி, 'வரிச்சியூர்' செல்வம் மீது பாய்கிறது குண்டாஸ்
மதுரை: மதுரையைச் சேர்ந்த பிரபல ரவுடிகளான டாக் ரவி, வரிச்சியூர் செல்வம் மற்றும் அழகர் ஆகியோரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
மதுரை, பெத்தானியாபுரத்தை சேர்ந்த ரவுடிகள் 5 பேரை போலீசார் கடந்த வாரம் சென்னையில் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், மதுரையை சேர்ந்த பிரபல ரவுடி டாக் ரவியை கொலை செய்ய வந்ததாக தெரிவித்தனர்.
மதுரையை மையமாக வைத்து ரவுடிக் கும்பல்கள் அதிகம் செயல்பட்டு வருவதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் மேலும் டாக் ரவி, திண்டுக்கல் பாண்டி ஆகியோரை சுட்டுப் பிடிக்கவும் டிஜிபி ராஜேந்திரன் உத்தரவிட்டார்.
இதனையடுத்து மதுரை போலீஸ் கமிஷனர் நந்தபாலன் உத்தரவின் பேரில் ரவுடிகள் வேட்டை தீவிரமானது.
இந்நிலையில் சென்னையில் கைது செய்யப்பட்ட ரவுடி அழகரின் கூட்டாளிகள் 2 பேர் உட்பட முக்கிய ரவுடிக் கும்பல்களை சேர்ந்த 18 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதற்கிடையில் தான் திருந்தி வாழ்வதாக சொல்லிக் கொண்டு திரைமறைவாக ரவுடியிசத்தை அரங்கேற்றிக் கொண்டிருந்த வரிச்சியூர் செல்வத்தை போலீசார் கைது செய்தனர்.
சைக்கிள் வந்த டாக் ரவி:
சுட்டுப் பிடிக்க உத்தரவிடப்பட்ட டாக் ரவி யாருமே எதிர்பாராத வகையில் நேற்று மிக சாதாரணமாக தனியாக சைக்கிளில் வந்து திருமங்கலம் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
டாக் ரவியை நீதிபதி 15 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிட்டதை தொடர்ந்து அவர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
50 கோடி சொத்து:
நீதிமன்றத்தில் ஆஜரான பிரபல ரவுடி டாக் ரவிக்கு மதுரை, திண்டுக்கல், வேலூர், சென்னை, பெங்களூர் உட்பட பல இடங்களில் இருக்கும் சொத்துக்களின் மதிப்பு மட்டும் ரூ.50 கோடிக்கும் மேல் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
போலீசார் டாக் ரவியின் சொத்துக்களை கணக்கெடுக்கும் பணியில் மும்மரமாக ஈடுபட்டுள்ளனர்.
குண்டர் சட்டத்தில் அடைக்க முடிவு:
மதுரையை இதுநாள் வரை கலக்கி வந்த டாக் ரவி, அழகர், வரிச்சியூர் செல்வம் ஆகியோரை குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
மேலும் தலைமறைவாக உள்ள பயங்கர ரவுடிகள் 25 பேரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications