சீனா சென்றார் பிரதமர் மன்மோகன் சிங்
பீஜிங்: 3 நாள் சீன பயணமாக பிரதமர் மன்மோகன் சிங் இன்று காலை பீஜிங் சென்றடைந்தார்.
பிரதமர் மன்மோகன் சிங், அவரது மனைவி குர்சரண் கெளர் மற்றும் உயர் மட்டக் குழுவினர் இன்று காலை பீஜிங் வந்தடைந்தபோது அவர்களுக்கு விமான நிலையத்தில் உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமருக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
சீன துணை வெளியுறவு அமைச்சர் டாய் பிங்காவோ, இரு நாட்டு சிறப்புப் பிரதிநிதிகள், இரு நாட்டு உயர் அதிகாரிகள் உள்ளிட்டோரும் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
சீனாவுக்கான இந்திய தூதர் நிருபமா ராவ் மற்றும் இந்திய தூதரக உயர் அதிகாரிகளும், பிரதமரை வரவேற்றனர்.
தனது 3 நாள் பயணத்தின்போது சீன அதிபர் ஹூ ஜிந்தாவோ, சீன பிரதமர் வென் ஜியாபோ ஆகியோரை பிரதமர் மன்மோகன் சிங் சந்திக்கவுள்ளார்.
இன்று பீஜிங் ஒலிம்பிக் திட்ட கண்காட்சி மையத்திற்கு பிரதமர் செல்கிறார். பின்னர் இந்திய வர்த்தகக் குழுவினரை அவர் சந்திக்கிறார். நாளை முதலீட்டாளர் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் கலந்து கொள்கிறார்.
இன்று இரவு சீன பிரதமர் வென் ஜியாபோ, பிரதமருக்கு விருந்தளித்து கெளரவிக்கிறார்.
இரு நாட்டு எல்லைப் பிரச்சினை குறித்து மன்மோகன் சிங்கின் பயணத்தின்போது முக்கியமாக விவாதிக்கப்படவுள்ளது.
-
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன்












Click it and Unblock the Notifications