முதியவரிடம் லஞ்சம் - அரசு டாக்டர் மீது புகார்
திருநெல்வேலி: ஆதரவற்றோர் பென்சன் பெறுவது தொடர்பான வயதுச் சான்றிதழ் தருவதற்கு லஞ்சம் கேட்டதாக அரசு டாக்டர் மீது அதிமுக பிரமுகர் குற்றம் சாட்டியுள்ளார். நடவடிக்கை எடுக்காவிட்டால் மறியலில் ஈடுபட போவதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஆதரவற்ற முதியவர்களுக்கு அரசு இந்திரா காந்தி நினைவு முதியோர் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதன் படி 64 வயது நிரம்பிய ஆண்களுக்கும், 61 வயது நிரம்பிய பெண்களுக்கும் மாதந்தோறும் ரூ.400 வழங்கப்பட்டு வருகிறது.
இந்த உதவித் தொகை பெறுவதற்கு அவர்களது வயதை சரி பார்த்து அரசு டாக்டர் கையெழுத்து போட்டு சான்றிதழ் கொடுக்க வேண்டும். அதன்பிறகு தான் இந்த தொகை கிடைக்கும்.
நெல்லை மாவட்டம் வி.கே.புரத்தை சேர்ந்த ஆதரவற்றோர் நான்கு பேர் அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்றனர். அவர்களை அதிமுக மேடைப் பேச்சாளார் மின்னல் மீனாட்சி அழைத்து சென்றார்.
அப்போது அங்கு பணியில் இருந்த டாக்டர் கையெழுத்து போட்டு தர ஆளுக்கு தலா ரூ.30 தர வேண்டும் என்று கேட்டுள்ளார். வந்தவர்கள் சாப்பாட்டுக்கே வழியில்லாமல் கஷ்டப்படுபவர்கள். அவர்களிடம் போய் பணம் கேட்கிறீர்களே என்று மின்னல் மீனாட்சி கேட்டிருக்கிறார்.
ஆனால் பணம் தராமல் கையெழுத்து போட்டு தர முடியாது என டாக்டர் கண்டிப்புடன் கூறியதால் ஏமாற்றத்துடன் அந்த நான்கு பேரும் திரும்பி விட்டனர்.
கொஞ்சம் கூட மனிதாபிமானம் இல்லாமல் நடந்து கொண்ட டாக்டர் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் சாலை மறியலில் ஈடுபடுவோம் என்று அதிமுக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய்












Click it and Unblock the Notifications