லாட்டரி சீட்டுகள் பறிமுதல்: ஒருவர் கைது
Subscribe to Oneindia Tamil
தென்காசி: தென்காசியில் லாட்டரி சீட்டுகள் வைத்திருந்த வாலிபரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து ஏராளமான லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.
தென்காசி பகுதியில் சில கடைகளில் சட்ட விரோதமாக தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக போலீசாருக்கு தொடர்ந்து புகார் வந்தது.
இதனை தொடர்ந்து அன்பு பிரகாஷ் எஸ்.ஐ. தலைமையில் போலீசார் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது தென்காசியை சேர்ந்த சுப்பிரமணியன் என்ற வாலிபர் சந்தேகப்படும்படி பஜார் பகுதியில் சுற்றிக் கொண்டிருந்தார்.
சந்தேகமடைந்த போலீசார் சுப்பிரமணியனை பிடித்து சோதனை செய்தார்கள். அப்போது அவரிடம் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் கட்டுகட்டாக ஏராளமாக இருந்தன.
இதைத் தொடர்ந்து போலீசார் சுப்பிரமணியனை கைது செய்து அவரிடம் இருந்த 2,500 லாட்டரி சீட்டுகளையும் பறிமுதல் செய்தனர்.












Click it and Unblock the Notifications