16 போலி டாக்டர்கள் 16 கைது-பலர் தலைமறைவு
Subscribe to Oneindia Tamil

நெல்லை: தென் மாவட்டங்களில் புலனாய்வுப் பிரிவு போலீசார் ரகசிய விசாரணை நடத்தி போலி டாக்டர்களை பிடித்து வருகின்றனர். கடந்த ஒரு மாதததில் மட்டும் 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து பல போலிகள் தலைமறைவாகிவிட்டன.
மருத்துவ பட்டங்கள் எதுவும் பெறாமல், மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்யாமல் மருத்துவத் தொழில் செய்யும் போலி டாக்டர்களை குறி வைத்துள்ளது உளவுப் பிரிவு.
நெல்லை மாவட்டம், களக்காடு பகுதியில் 2 டாக்டர்களும் வீரவநல்லூரில் 2 போலி டாக்டர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். அதே போல் கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் கடந்த ஒரு மாத காலத்திற்குள் 12 போலி டாக்டர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போலி டாக்டர்கள் வேட்டை தொடர்வதை அறிந்த பல போலி டாக்டர்கள் தலைமறைவாகி விட்டனர்.
சித்தா, ஆயுர்வேதா, ஹோமியோபதி, யுனானி என தங்கள் சிகிச்சை முறையை பதிவு செய்த பின்னர் மருத்துவ கவுன்சில் அளிக்கும் எண்களை வைத்தே டாக்டர்கள் மருத்துவ தொழில் புரிய வேண்டும். சாதாரண நாட்டு வைத்தியர்கள் கூட தாசில்தார் அனுமதி பெற்றே மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என விதி உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications