தஞ்சையில் அதிமுக அலுவலகம் சூறை-திமுகவினர் மீது வழக்கு
தஞ்சை: தஞ்சை மாவட்டம், ஒரத்தநாட்டில் பொங்கல் விழாவில் மோதல் ஏற்பட்டதால் அதிமுக அலுவலகம் சூறையாடப்பட்டது. இதுதொடர்பாக திமுகவினர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
தஞ்சை மாவட்டம், ஒரத்தநாட்டில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. அப்போது ஒரத்தநாடு புதுரை சேர்ந்த இளவரசன் என்பவர் மாட்டை கட்டையால் அடித்தார்.
அந்த அடி அதிமுகவினர் மீது பட்டது. இதனால் அதிமுகவினர் - திமுகவினர் இடையே மோதல் ஏற்பட்டது.
அப்பேது அருகில் இருந்த அதிமுக அலுவலகத்தின் உள்ளே புகுந்த சிலர் உருட்டுக்கட்டை, தடி, அரிவாள் போன்றவற்றால் அந்த அலுவலகத்தை சூறையாடினர். அதிமுக அலுவலகத்தில் இருந்த டிவி, நாற்காலிகள் அடித்து நொறுக்கப்பட்டது.
இது குறித்து அப் பகுதி அதிமுக கிளைச் செயலாளர் மாரிமுத்து ஒரத்தநாடு போலீஸில் புகார் செய்தார்.
புகாரின் பேரில் ஒரத்தநாடு போலீசார், ஒரத்தநாடு யூனியன் தலைவரும், திமுக ஒன்றியச் செலாளருமான காந்தி மற்றும் திமுக நிர்வாகிகள் சுரேஷ், இளவரசன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
-
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
ஒதுங்கும் துரைமுருகன்.. திமுகவின் புதிய பொதுச்செயலாளராகிறாரா ஆ.ராசா? உதயநிதி ஸ்டாலினும் ஆதரவாம்! -
ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுத்த கருணாநிதி! திநகர் மாஜி எம்எல்ஏவை தட்டி தூக்கிய தவெக! -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
யார் எம்எல்ஏ, யார் அமைச்சர் என்று முதல்வருக்கே தெரியாத ஆட்சி நடக்கிறது.. உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்! -
ஆதவ் அர்ஜுனா சொன்னது நடக்குதா? ஈபிஎஸ் தலையில் இடிப்போல் இறங்கிய செய்தி.. அதிமுக எதிர்காலம்? -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
தவெகவில் இணைந்த 5 மாஜி அமைச்சர்கள், 7 Ex MLAs! இதுவரை அதிமுகவில் இருந்து விலகியவர்கள் யார் யார்? -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம்












Click it and Unblock the Notifications