குஜராத்தில் என்டிடிவி அலுவலகம் மீது தாக்குதல்
Subscribe to Oneindia Tamil
அகமதாபாத்: அகமதாபாத்தில் உள்ள என்டிடிவியின் அலுவலகத்தை ஹிந்து சாம்ராஜ்ய சேனா அமைப்பை சேர்ந்த 20 பேர் கொண்ட கும்பல் அடித்து நொறுக்கியது.
பாரத் ரத்னா வழங்குது குறித்து என்டிடிவி நடத்திய கருத்துக் கணிப்பில் ஓவியர் எம்.எஃப்.ஹூசைனின் பெயரும் இடம் பெற்றிருந்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தத் தாக்குதல் ஹிந்து சாம்ராஜ்ய சேனா நடத்தியுள்ளது. 20 பேர் கொண்ட கும்பல் அகமதாபாத்தில் உள்ள என்டிடிவி அலுவலகத்துக்குள் இன்று காலை நுழைந்தது.
அங்கிருந்த நாற்காலிகள், ஏசி மற்றும் எலக்ட்ரிக் சாதனங்களை அடித்து நொறுக்கியது. தடுக்க வந்த டிவி நிறுவன ஊழியர்களையும் ஹாக்கி மட்டைகளால் அவர்கள் தாக்கினர்.
தாக்கிய பின்னர் தங்கள் எதிர்ப்பை நோட்டீஸ் மூலம் என்டிடிவி அலுவலகத்தின் வாயிலில் ஒட்டிவிட்டு சென்றனர்.












Click it and Unblock the Notifications