பிப். 13ல் அதிமுக பொதுக்குழு, செயற்குழு: ஜெ.

சமீபத்தில்தான் அதிமுக செயற்குழுக் கூட்டம் நடந்தது. இந்த நிலையில் செயற்குழு மற்றும் பொதுக் குழுக் கூட்டத்ைத ஜெயலலிதா கூட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வரும் பிப்ரவரி 13ம் தேதி (புதன்கிழமை) சென்னையை அடுத்துள்ள வானகரத்தில் இருக்கும் ஸ்ரீவாரி வெங்கடாஜலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் காலை 10 மணிக்கு அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெறும்.
இதுதொடர்பாக செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கு தனித்தனியே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்படும்.
உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் தங்கள் அழைப்பிதழுடன் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டங்களில் கலந்து கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.
அதிமுக செயற்குழு, பொதுக் குழுக் கூட்டங்களில் அடுத்த தேர்தலில் அதிமுக அமைக்கப் போகும் கூட்டணி குறித்த முக்கிய முடிவுகளை ஜெயலலிதா அறிவிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கே.பி.அன்பழகன் நீக்கம்:
இதற்கிடையே, முன்னாள் அமைச்சரும், தர்மபுரி மாவட்ட செயலாளர் பொறுப்பை வகித்து வந்தவருமான கே.பி.அன்பழகனை அப்பதவியிலிருந்து தூக்கியுள்ளார் ஜெயலலிதா.
அவருக்குப் பதில், ஊத்தங்கரை பஞ்சாயத்து யூனியன் தலைவர் கே.ஈ.கிருஷ்ணமூர்த்தியை மாவட்ட செயலாளராக நியமனம் செய்துள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.
-
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் வாசுதேவன் காலமானார்.. கடைசி வரை நிறைவேறாத ஆசை! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications