கட்சியை பலப்படுத்தி வருகிறோம் - கார்த்திக்
தஞ்சாவூர்: நாங்கள் இப்போதைக்கு எங்கள் கட்சியை வலுப்படுத்தும் பணியில் மட்டுமே ஈடுபட்டுள்ளோம். உறுப்பினர் சேர்க்கை தீவிரமாக நடந்து வருகிறது என்று பார்வர்டு பிளாக் கட்சியின் மாநிலத் தலைவர் நடிகர் கார்த்திக் கூறியுள்ளார்.
தஞ்சையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், நான் முதலில் ஒரு நடிகன். 2 வருடமாகத்தான் அரசியலில் ஈடுபட்டுள்ளேன்.
இரண்டையும் நான் ஒரு சீராக செயல்படுத்தி வருகிறேன். இது மக்களுக்கு நன்றாக தெரியும்.
தற்போது பார்வர்டு பிளாக் கட்சியில் உறுப்பினர் சேர்க்கை தீவிரமாக நடந்து வருகிறது. பல சமூகத்தினரும் இதற்கு வருகின்றனர். குறிப்பிட்டவர்களுக்கான கட்சி இது இல்லை என்ற நிலையை உருவாக்குகிறோம்.
எனது செயல்பாட்டை பார்த்துத் தான் தலைவர் மற்றும் பொதுச்செயலாளர் பதவி என்று இரண்டையும் எனக்கு தேசிய நிர்வாகம் வழங்கியுள்ளது. வேறு எந்த மாநிலத்திலும் இப்படி இரு பதவிகளையும் ஒருவரிடமே கட்சி மேலிடம் ஒப்படைக்கவில்லை. படிப்படியாக கட்சியை பலப்படுத்துகிறோம்.
தேர்தலுக்கு இன்னும் நாட்கள் உள்ளன. இப்போதைக்கு எங்கள் கட்சியை வலுப்படுத்தும் பணியில் மட்டுமே ஈடுபட்டுள்ளோம்.
விஜயகாந்த் கட்சி நல்ல வளர்ச்சியை பெற்றுள்ளது. புதிய படம் வந்தால் தியேட்டர்களில் கூட்டம் அலைமோதும். ஆனால் அந்தப்படம் எப்படி இருக்கிறது என்பதைப் பொறுத்து தான் சில நாட்களுக்கு பின்னர் மாற்றங்கள் வரும். அதுபோலத் தான் தேமுதிக புதிய கட்சி. அது எப்படி இருக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
விஜயகாந்த், சரத்குமார் கட்சி தொடங்கினாலும், அவரவர்களுக்கு ஒரு பாதை உள்ளது. தேர்தல் நேரத்தில் தான் எதையும் முடிவு செய்ய இயலும்.
அரசு இலவச டிவி, அரிசி வழங்குவது ஒரு விதமான அறிவிப்பு. குஜராத்தில் கூட காங்கிரஸ் கட்சியினர் இதுபோல அறிவித்தனர். இருப்பினும் தோல்வியைத் தான் சந்தித்தனர்.
அரசின் இந்த திட்டங்கள் கவர்ச்சிகரமானது. இதன் மீது மக்களுக்கு ஆர்வம் இருக்கும். நீண்ட நாட்களுக்கு இதன் தாக்கம் இருக்காது. உழைத்து, சம்பாத்தித்து நாமே வாங்கிய பொருள் மீது நமக்கு பற்று அதிகமாகும். இலவசங்கள் மீது பெரிய மரியாதை ஏற்படாது என்றார் கார்த்திக்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications