கலாம் தவறவிட்ட பை-மீட்டு தந்த போலீஸ்
மதுரை: முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பெங்களூரில் விட்டுச்சென்ற பையை போலீசார் மீட்டு அவரிடம் பத்திரமாக ஒப்படைத்தனர்.
பெங்களூரில் சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அப்துல் கலாம் விமானம் மூலம் மதுரை சென்றார்.
தனது அண்ணனின் பேரன் திருமண விழாவிற்காக சொந்த ஊரான ராமேஸ்வரத்திற்கு மதுரையில் இருந்து காரில் கிளம்பினார்.
வழியில் தனது பையை தவறவிட்டதை கலாம் உணர்ந்தார். இதையடுத்து மதுரை போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் போனது. அவர்கள் மதுரையில் கலாம் பங்கேற்ற நிகழ்ச்சிகள் நடந்த இடங்களில் தேடியும் பை கிடைக்கவில்லை.
இதையடுத்து பெங்களூர் போலீசாருக்கு இந்த தகவலை தெரிவித்தனர். அவர்கள் தேடலில் ஈடுபட்டபோது, பெங்களூரில் இருந்து மதுரைக்கு செல்ல கார் மூலம் விமான நிலையம் சென்றபோது அந்த காரில் கலாம் பையை தவறவிட்டது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அந்த பையை மீட்டு தனி கார் மூலம் ராமேஸ்வரத்துக்கு அனுப்பி வைத்தனர்.
அந்தப் பையில் கலாமின் செல்போன், டைரி, கால்குலேட்டர் மற்றும் அவரது அண்ணன் பேரன் திருமணத்திற்காக வாங்கி வைத்திருந்த பரிசுப் பொருட்கள் இருந்தன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications