Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜெயலலிதா எம்ஜிஆரின் வாரிசா?-விஜயகாந்த் கிடுக்கிப்பிடி

Subscribe to Oneindia Tamil

Vijayakanth
பெருந்துறை: ஜெயலலிதாவை தனது வாரிசு என்று எம்.ஜி.ஆர் எப்போதாவது சொன்னாரா என ஜெயலலிதாவுக்கு விஜய்காந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஈரோட்டில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது,

வறுமையையும், ஊழலையும் ஒழிப்பேன் என்பது தான் எனது கொள்கை. அதனால் எனக்கு கொள்கை எதுவும் கிடையாது என்று சொல்லும் சில தலைவர்கள் 5 வருடத்துக்கு ஒரு முறை கட்சி மாறி கூட்டணி வைத்து சம்பாதிப்பதையே கொள்கையாக கொண்டுள்ளனர்.

ஊழலை எப்படி ஒழிக்க முடியும் எனக் கேட்டுள்ளார்கள். ஊழலை ஏன் ஒழிக்க முடியாது. தலைவர் எந்த வழியோ, அந்த வழியே மற்றவர்களும் என இருந்தால் கீழ் மட்டத்தில் இருந்து மேல் மட்டம் வரை ஊழலை ஒழிக்க முடியும்.

இன்று வறுமை 22 சதவீதமாக உயர்ந்து விட்டது. வறுமையை ஒழிக்க இதுவரை ஆட்சி செய்தவர்களால் முடியவில்லை. அவர்களது சொந்த பந்தங்களின் வறுமையைத்தான் ஒழித்தார்களே தவிர, ஏழை மக்களின் வறுமையை அவர்களால் இன்னும் ஒழிக்க முடியவில்லை.

கடந்த 1962ம் ஆண்டு அண்ணா எந்த கட்சியுடனும் கூட்டணி வேண்டாம் எனச் சொன்னார். ஆனால், அண்ணாவின் கொள்கைகளை கடைபிடிப்பதாக முதல்வர் (கருணாநிதி) மற்ற கட்சிகளுடன் கூட்டணி வைத்து மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்.

எனக்கு டார்ச்சர் கொடுக்க வேண்டும் என்பதற்காக எனக்கு சொந்தமான திருமண மண்டபத்தை இடித்தனர். ஆனால் நான் பயப்படவில்லை. எனது வீட்டில் வருமானவரி சோதனை நடத்தினார்கள். ஆனால் அவர்கள் நினைப்பது போல் எதுவும் சிக்கவில்லை. இதுபோன்ற செயல்களால் என்னை யாரும் விலை கொடுத்து வாங்க முடியாது.

என்னை அழிக்க நினைத்தால் நீங்கள்தான் அழிந்து போவீர்கள். தேர்தல் நேரத்தில் பணம் கொடுத்து உங்களிடம் சத்தியம் வாங்குவார்கள். இந்த சத்தியத்துக்கு பயந்து நீங்களும் அவர்களுக்கு ஓட்டு போட்டு விடுவீர்கள்.

ஆயிரம் பொய் சொல்லி திருமணத்தை நடத்துவதுபோல, உங்கள் ஓட்டை ஏன் மாற்றி போடக் கூடாது.

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக எந்த கட்சியுடனும் கூட்டணி வைத்துக் கொள்ளாது. எனது சொத்தை விற்றாவது தனியாகவே தேர்தலில் போட்டியிடுவேன். தெய்வத்துடனும், மக்களுடனும் தான் நாங்கள் கூட்டணி வைத்துக் கொள்வோம். நாளை நமதே. 40 நாடாளுமன்ற தொகுதிகளும் நமதே.

தைரியம் இருந்தால் தனியாக தேர்தலை சந்திக்க மற்ற கட்சிகள் தயாரா. இதற்கு யாரும் பதில் சொல்ல மாட்டார்கள்.

மக்கள் நினைத்தால் புரட்சி வெடிக்கும். கடலின் ஆழத்தை கூட அளந்து விடலாம். ஆனால் பெண்கள் மனதின் ஆழத்தை கண்டுபிடிக்க முடியாது. எனவே நீங்கள் நினைத்தால் ஆட்சியை மாற்ற முடியும்.

இப்போது தமிழகத்தில் வாரிசு சண்டை நடக்கிறது. எம்.ஜி.ஆரின் வாரிசு நான்தான் என சிலர் கூறுகிறார்கள். நான் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகன். அவர் எனக்கு மானசீக குரு. எம்.ஜி.ஆரின் வாரிசு நான் தான் என்று எப்போதுமே நான் சொல்லவில்லை.

எம்.ஜி.ஆர் யாரையாவது வாரிசு என்று சொன்னாரா. தொண்டர்கள், ரசிகர்கள் தான் என்னுடைய வாரிசு என்று தான் எம்.ஜி.ஆர் சொன்னார்.

மகாத்மா காந்தி, எனது அரசியல் வாரிசு நேரு, ஆன்மீக வாரிசு வினோபா என்று சொன்னார். காமராஜர், அண்ணா, எம்.ஜி.ஆர் ஆகியோர் தனக்கு வாரிசு என யாரையும் சொல்லவில்லை.

நாட்டு மக்கள் ஏமாறக்கூடாது என்பதால் தான் அவர்கள் வாரிசு என்று யாரையும் சொல்லவில்லை.

தன்னை எம்.ஜி.ஆரின் வாரிசு என்று சொல்லும் அவர் (ஜெயலலிதா), 1987ம் ஆண்டுக்கு பின்னர் எப்போதாவது ராமாவரம் தோட்டத்துக்கு சென்றாரா. குளத்தின் தாமரையின் வாசனை தவளைக்கு தெரியாது. ஆனால் எங்கிருந்தோ வரும் வண்டுக்குத்தான் தெரியும். இதுபோல எம்.ஜி.ஆர் என்ற தாமரை, வண்டாகிய விஜயகாந்துக்கு தான் தெரியும்.

நான் எம்.ஜி.ஆரின் வாரிசு என்று எப்போதுமே சொன்னதில்லை. ஆனால் என்னிடம் உள்ள தாராள குணத்தை பார்த்து எம்.ஜி.ஆரின் வாரிசாக மக்கள் என்னை நினைக்கிறார்கள். அவர்கள் எம்.ஜி.ஆரின் வாரிசாக என்னை ஏற்றுக் கொண்டுள்ளார்கள் என்றார் விஜயகாந்த்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+