காஞ்சிபுரம் அருகே பொறியியல் மாணவர் தற்கொலை
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே உள்ள சுயநிதிப் பொறியியல் கல்லூரியில் படித்து வந்த 19 வயது மாணவர் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
சென்னையைச் சேர்ந்தவர் வெங்கடேஷ் (19). இவர் காஞ்சிபுரம் மாவட்டம் புளியம்பாக்கம் என்ற இடத்தில் உள்ள தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரியில் பி.இ. கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வந்தார்.
அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அதில் தங்கிப் படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார் வெங்கடேஷ்.
அவரது தற்கொலைக்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. இருப்பினும், காதல் தோல்வியோ அல்லது பெற்றோருடன் ஏற்பட்ட கருத்து மோதலோதான் காரணமாக இருக்க முடியும் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
வெங்கடேஷ் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு கடிதம் எதையும் எழுதி வைக்கவில்லை.
அவரது உடலை மீட்ட போலீஸார், பிரேதப் பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.












Click it and Unblock the Notifications