கம்யூனிஸ்ட் அலுவலகத்தை எரித்த வழக்கில் 4 அதிமுகவினர் கைது!
Subscribe to Oneindia Tamil
திருவாரூர்: திருவாரூர் அருகே கம்யூனிஸ்ட் அலுவலகத்தை எரித்த 4 அதிமுகவினரை போலீசார் கைது செய்தனர்.
திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே நெம்மேலியில் கம்யூனிஸ்ட் கிளை அலுவலகம் உள்ளது.
இந்த அலுவலகம் இரவு திடீரென தீப்பற்றி எரிந்ததில் அலுவலகத்தில் இருந்த பொருட்கள் சாம்பலாயின. எரிந்த பொருட்களின் மதிப்பு சுமார் ரூ.10,000 என கூறப்படுகிறது.
இது குறித்து கம்யூனிஸ்ட் கட்சி அலுவலக நிர்வாகி கிருஷ்ணமூர்த்தி கோட்டூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி அப்பகுதியை சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் அறிவழகன், குமார், உத்திராபதி, கண்ணன் அகிய 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications