அரசு ஆலைக்கு திடீர் மூடு விழா-தொழிளாளர்கள் அதிர்ச்சி!!
கரூர்: கரூர் அருகே செயல்பட்டு வந்த அரசு ஆலை தீடீரென மூடப்பட்டதால் அங்கு பணியாற்றி வந்த தொழிலாளர்கள் கடும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
கரூர் மாவட்டம், மாயனூரில் தமிழ்நாடு ஆஸ்பெஸ்டாஸ் ஆலை உள்ளது. இந்த ஆலை 1984ம் ஆண்டு துவக்கப்பட்டது. அப்போது 225 பேர் பணியாற்றி வந்தனர்.
ஆஸ்பெஸ்டாஸ் ஷீட் தயாரிக்க தேவையான கல் நார் அழுத்த குழாயும் இங்கு தயாரிக்கப்பட்டு வந்தது. மேலும் குடிநீர் வடிகால் வாரியத்திற்கு தேவையான அனைத்து குழாய்களையும் இங்கு கொள்முதல் செய்யப்பட்டு வந்தன.
ஆனால், நாளைடைவில் தனியாரிடமும் குழாய்களை வாங்கலாம் என அரசு அறிவித்ததால் இந்த ஆலை நலிவடைந்துவிட்டது.
இதனால் இந்த ஆலையில் பணியாற்றி வந்த 118 ஊழியர்கள் கடந்த 2005ம் ஆண்டு ஜூன் 30ம் தேதியுடன் விருப்ப ஓய்வு பெற்றுச் சென்று விட்டனர். இங்கு பணிபுரிந்து வந்தவர்களில் 54 பேர் மாற்று பணியிடம் கேட்டு போராடி வந்தனர்.
இந் நிலையில் நேற்று தொழிலாளர்கள் வேலைக்கு சென்றபோது ஆலை மூடப்பட்டதாக மெயின் கேட்டில் நோட்டீஸ் ஒட்டப்பட்டிருந்தது. இதை பார்த்த தொழிலாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்து போராட்டத்தில் குதித்தனர்.
இதனால் அங்கு பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications