மாற்றுப் பாதையில் சேது சமுத்திர திட்டம்-உச்ச நீதிமன்றத்தில் ஜெ மனு
டெல்லி: ராமர் பாலத்திற்கு சேதம் இல்லாமல் மாற்றுப் பாதையில் சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மனுத் தாக்கல் செய்துள்ளார்.
ஏற்கனவே இதே போன்ற மனுவை ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமியும் தாக்கல் செய்துள்ளார். அதன் மீதான விசாரணை நடந்து வரும் நிலையில் ஜெயலலிதாவும் ஒரு வழக்கை தாக்கல் செய்துள்ளார். அதில் ஜெயலலிதா கூறியுள்ளதாவது:
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ராமர் பாலம் உள்ளது. ஆதம் பாலம் என்றாலும் அது ராமர் பாலம்தான். இந்த பாலத்திற்கான ஆதாரங்கள் தஞ்சை சரஸ்வதி மகாலில் உள்ள ஆவணங்களிலும், பிரிட்டிஷ் ஆவணங்களிலும் மற்றும் வேத, இலக்கியங்களிலும் சான்றுகள் உள்ளன.
ராமர் பாலம் மிகவும் தொன்மை வாய்ந்தது ஆகும். இந்த பாலம், இந்துக்களின் புனித சின்னமாகவும் உள்ளது.
இந்தப் பாலத்தை பாதுகாக்க வேண்டியது மத்திய அரசின் கடமை ஆகும். ஆனால், சேது சமுத்திர திட்டத்தினால் இந்த பாலத்திற்கு சேதம் ஏற்படும். ஆகவே, பாலத்தை இடிக்காமல் மாற்றப் பாதையில் சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற உத்தரவிட வேண்டும்.
ராமர் பாலத்தை தேசிய புராதன சின்னமாக அறிவிக்க வேண்டும். அதை உலக புராதன சின்னமாகவும் போற்ற வேண்டும். மேலும், சுற்றுச் சூழலையும் பாதுகாக்க உத்தரவிட வேண்டும் என்று கூறியுள்ளார்.
இந்த மனு வரும் 28ம் தேதி விசாரணைக்கு வருகிறது.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications