தமிழகத்தில் 4 ஆண்டுகளில் 20 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள்

தமிழக சட்டசபை கூட்டத் தொடரை துவக்கி வைத்து ஆளுநர் பர்னாலா உரையாற்றுகையில்,
தமிழக அரசின் புதிய தொழில் கொள்கை மூலமாக ஏராளமான தனியார் துறையினர் இங்கு தொழில்களை துவக்கி வருகின்றன. இந்த ஆட்சி பொறுப்புக்கு வந்த பின் இதுவரை 12 மிகப் பெரிய தொழில் நிறுவனங்களுடன் தொழிற்சாலைகள் துவங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
மோடராலோ, டெல், சாம்சங், ரெனால்ட்-நிஸான் உள்ளிட்ட இந்த நிறுவனங்கள் தமிழகத்தில் ரூ. 15,083 கோடி அளவுக்கு முதலீடுகள் செய்து தொழிற்சாலைகளை தொடங்கவுள்ளன. இதில் 4 நிறுவனங்கள் உற்பத்தியையும் துவக்கிவிட்டன.
இந்த நிறுவனங்கள் மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் 1.37 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஹூண்டாய் நிறுவனம் தனது உற்பத்தியை வருடத்துக்கு 6.3 லட்சம் கார்களாக அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. இதற்காக ரூ. 4,000 கோடியை தமிழகத்தில் முதலீடு செய்யவுள்ளது.
அதே போல போர்ட் நிறுவனமும் தனது உற்பத்தியை மேலும் 2 லட்சம் கார்களாக உயர்த்த திட்டமிட்டுள்ள அதற்காக ரூ. 1,800 கோடியை முதலீடு செய்யவுள்ளது. தமிழகத்தில் தொழில் நடத்தும் பன்னாட்டு நிறுவனங்கள் தமிழகத்திலேயே தொழிலை விரிவுபடுத்த முடிவு செய்துள்ளது மாநிலத்துக்கு கிடைத்த பெருமையாகும்.
பெரிய நிறுவனங்கள் மட்டுமல்லாமல் சிறு தொழில்களுக்கும் ஊக்கம் அளிக்க எல்லா நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. இந்தத் துறைக்கு மேலும் உதவும் வகையில் விரைவில் புதிய சிறு தொழில் கொள்கை வெளியிடப்படும். விவசாயம் சார்ந்த சிறு தொழில்களுக்கு சலுகைகள் அறிவிக்கப்படவுள்ளன என்று கூறியுள்ளார் பர்னாலா.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications