தஸ்லிமா விசா மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிப்பு
கொல்கத்தா: சர்ச்சைக்குரிய வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரினின் விசாவை மேலும் 6 மாதங்களுக்கு மத்திய அரசு நீட்டித்துள்ளது.
கொல்கத்தாவில் தங்கியிருந்த தஸ்லிமாவை எதிர்த்து முஸ்லீம் அமைப்புகள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து அவர் அங்கிருந்து வெளியேறினார். ராஜஸ்தான் சென்ற அவரை ராஜஸ்தான் அரசு டெல்லிக்கு அனுப்பி வைத்தது.
தற்போது டெல்லியில், மத்திய அரசின் பாதுகாப்புடன், ரகசிய இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார் தஸ்லிமா. தன்னை மத்திய அரசு வீட்டுக் காவலில் வைத்துள்ளதாக தஸ்லிமா கூறியுள்ளார்.
இந்த நிலையில், தஸ்லிமாவுக்கு மேலும் 6 மாதங்களுக்கு விசா நீட்டிக்கபப்ட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பிப்ரவரி 17ம் தேதி முதல் ஆறு மாதங்களுக்கு அவரது விசா நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த தகவலை தஸ்லிமாவே வெளியிட்டுள்ளார். இதுகுறித்து செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், எனது விசா மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக நான் அறிகிறேன்.
எனது விசாவை நீட்டித்தற்காக நான் இந்திய அரசுக்கு கடமைப்பட்டுள்ளேன். இந்தியாவை எனது சொந்த நாடாகத்தான் நான் கருதுகிறேன்.
ரகசிய இடத்தில் நான் மிகவும் சோர்வாக உணர்கிறேன். விரைவில் கொல்கத்தா விரும்புகிறேன்.
வீடடுக் காவல் விரைவில் முடிய நான் விரும்புகிறேன். கொல்கத்தாதான் எனது நகரம். அங்கு திரும்பவே நான் விரும்புகிறேன்.
இன்னும் எத்தனை நாட்களுக்கு இப்படி நான் ரகசிய இடத்தில் இருப்பேன் என்று தெரியவில்லை. ஆனால் நான் எந்தக் குற்றமும் செய்யவில்லை என்பதை மட்டும் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன் என்றார் தஸ்லிமா.
கடைசியாக கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி தஸ்லிமாவின் விசா நீட்டிக்கப்பட்டது. தற்போது மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications