தேனி அருகே குளத்தில் இறந்து கிடந்த 2000 கோழிகள்!-மக்கள் பீதி!

Subscribe to Oneindia Tamil

Hen
தேனி: தேனி அருகே இறந்த நிலையில் 2,000க்கும் மேற்பட்ட கோழிகள் குளத்தில் வீசப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களுக்கு பறவைக் காய்ச்சல் பீதியை உண்டாக்கியுள்ளது.

தேனி மாவட்டம், தேவதானப்பட்டி அருகே காமாட்சி அம்மன் கோவிலுக்கு செல்லும் வழியில் உள்ள குளத்தில் யாரோ சிலர் இறந்த நிலையில் 2,000க்கும் அதிமாக கோழிகள் வீசி விட்டு சென்றுள்ளனர்.

அந்த வழியே சென்ற மக்கள் கோழிகள் இறந்த நிலையில் குளத்தில் கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்து, உடனே மாவட்ட கலெக்டருக்கு தகவல் கொடுத்தனர்.

பின்னர் கலெகடர் உத்தரவின் பேரில் சுகாதார இயக்குனர் பாலசுப்பிரமணியன், கால்நடை இணை இயக்குனர் மதன் கோபால், பேரூராட்சி நிர்வாக அலுவலர் பஷீர் ஆகியோர் இந்த குளத்திற்கு சென்று இறந்த கோழிகளை எடுத்து எரித்தனர்.

இறந்த கோழிகளை குளத்தில் கொட்டியது யார் என அதிகாரிகள் விசாரணையில் செய்ததில், தேனி அருகேயுள்ள அட்டனம்பட்டியில் கோழி பண்ணை வைத்திருக்கும் பொன்னுசாமி தான் இந்த இறந்த கோழிகளை கொட்டியவர் என விசாரணையில் தெரிய வந்தது.

இதனால் இவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் துறைக்கு சுகாதார துணை இயக்குனர் பாலசுப்பிரமணியன் பரிந்துரை செய்துள்ளார்.

கோழிகள் இறந்ததற்கு பறவைக் காய்ச்சல் தான் காரணமாக என அறிய, இறந்து கிடந்த கோழிகளின் மாதிரிகள் ஆய்வுக்கூடத்திற்கு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இதனால் தேனி மாவட்ட மக்கள் தங்கள் பகுதியிலும் பறவைக் காய்ச்சல் வந்துவிட்டதா என்ற பீதியில் உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+