போலி நில ஆவண மோசடி: 4 பேர் கைது
ஈரோடு: ஈரோடு அருகே போலி நில ஆவண மோசடி தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம், சிவகிரி நல்லசெல்லி பாளையத்தை சேர்ந்த செந்தில்குமாருக்கு சொந்தமான 9 ஏக்கர் நிலத்தின் பேரில் செல்வக்குமார் என்பவர் போலி ஆவணம் தயார் செய்து மங்களப்பட்டி கனரா வங்கியில் ரூ.15 லட்சம் கடன் பெற்றார்.
இது போல் மேலும் பலரும் போலி ஆவணங்களைக் காட்டி பெரும் பண மோசடியில் ஈடுபட்டுள்ளதாக அப்பகுதி விவசாயிகள் சிலர் மாவட்ட கலெக்டரிடம் புகார் அளித்தனர்.
இதுகுறித்து விசாரணை நடத்த மாவட்ட கலெக்டர் காவல்துறைக்கு உத்தரவிட்டார். போலீசார் விசாரணை நடத்தியதில் இது போன்று சுமார் 11 பேர் ரூ.84 லட்சம் வரை மோசடி செய்திருப்பது தெரியவந்தது.
அதை தொடர்ந்து ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் முருகேசன், அரச்சலூர் இன்ஸ்பெக்டர் தன்ராஜ் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.
அவர்கள் நடத்திய விசாரணையில் மோசடி தொடர்பாக நல்லிசெல்லிபாளையத்தை சேர்ந்த 11 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
இதில் நல்லிசெல்லிபாளையத்தை சேர்ந்த அண்ணாமலை, பத்திர அலுவலகத்தில் ஆவண காப்பக எழுத்தாளராக பணிபுரியும் கோபால கிருஷ்ணன், தர்மர், பொன்னப்ப நாடார் ஆகியோர் கைது
செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் மேலும் பலர் கைது செய்யப்படலாம் என தெரிகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications