சர்ச்சை சாமியார் பழனிச்சாமிக்கு நிபந்தனை ஜாமீன்
சென்னை: பெண்களிடம் முறைகேடாக நடந்து கொண்டதாக சமீபத்தில் சர்ச்சையில் சிக்கி கைதான சென்னை மடிப்பாக்கம் சாமியார் பழனிச்சாமிக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.
சென்னை மடிப்பாக்கம் பகுதியில், ஆசிரமம் அமைத்து மதுரை வீரன் கோவிலை நடத்தி வந்தவர் பழனிச்சாமி. இவர் சமீபத்தில் பெரும் சர்ச்சையில் சிக்கினார்.
ஹோமியோபதி டாக்டர் திவ்யா என்பவரை 3வது கல்யாணம் செய்து கொண்டதாகவும், தனது ஆசிரமத்திற்கு குறி கேட்க வருகிறவர்களிடம் முறைகேடாக நடந்து கொண்டதாகவும் கூறி பழனிச்சாமி மீது அவரது முதல் மனைவி சந்திரா மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அதேபோல தனது மகளை கடத்திச் சென்று விட்டதாக பழனிச்சாமி மீது திவ்யாவின் தந்தையும் முகப்பேர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
இதையடுத்து தலைமறைவான பழனிச்சாமியும், திவ்யாவும் டெல்லி போய் விட்டனர். பின்னர் திவ்யா மட்டும் சென்னைக்குத் திரும்பினார். ஆனால் பழனிச்சாமியைக் காணவில்லை.
அவரை காஞ்சிபுரம் மாவட்டம் அச்சிரபாக்கம் அருகே உள்ள ஒரு கோவிலில் வைத்து கடந்த டிசம்பர் 23ம் தேதி போலீஸார் கைது செய்தனர். பின்னர் அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதையடுத்து ஜாமீன் கோரி பழனிச்சாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்தார். இதை விசாரித்த நீதிபதி சுதந்திரம் இன்று பழனிச்சாமிக்கு நிபந்தனை ஜாமீன் அளித்து உத்தரவிட்டார்.
அதன்படி ஆந்திர மாநிலம் சித்தூர் காவல் நிலையத்தில் தினசரி ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என பழனிச்சாமிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
-
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications