ஜனவரி 29ல் பூமியை கடக்கப் போகும் எரிகல்

600 மீட்டர் நீளமும் 150 மீட்டர் அகலமும் கொண்ட இந்த எரி கல் பூமியை 5,34,000 கிமீ தூரத்தில் கடந்து செல்லும். இந்த எரி கல்லுக்கு asteroid 2007 TU24 என பெயரிடப்பட்டுள்ளது.
வரும் 2027ல் தான் அடுத்த மிகப் பெரிய எரி கல் பூமியின் மிக அருகே வந்து போகும் எனக் கணக்கிடப்பட்டிருந்தது. இந் நிலையில் இந்த எரிகல் பூமிக்கு அருகே வந்து போகவுள்ளதாக அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாஸா தெரிவித்துள்ளது.
ஆனால், இது பூமியை மோத வாய்ப்பில்லை என்றும் தெளிவுபடுத்தியுள்ளது. ஜனவரி 29ம் தேதி இந்திய நேரப்படி பகல் 12.04 மணிக்கு இந்த எரி கல் கடந்து போவதை தொலைநோக்கியின் உதவியால் பார்க்க முடியும்.
இந்த எரிகல் பூமியை நெருங்குவதை அரிசோனா பல்கலைக்கழகத்தின் கேடலினா ஸ்கை சர்வே குழு தான் முதலில் கண்டறிந்தது.
சமீப காலத்தில் பூமியை மிக நெருக்கமாக கடந்து போன எரி கல் 2004 FU162 ஆகும். இது கடந்த 2004ம் ஆண்டு மார்ட் 31ம் ேததி 6,500 கி.மீ. தூரத்தில் கடந்தது. கடந்த ஆண்டு நவம்பரில் பூமியைக் கடந்த 2007 WD5 எரி கல் வரும் ஜனவரி 30ம் தேதி செவ்வாய் கிரகத்தை 26,000 கிமீ தூரத்தில் கடக்கவுள்ளது.
இந்த எரி கல் செவ்வாய் கிரகத்தின் மீது மோதவும் வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications