வாகனங்கள் அதிகரிப்பால் மூச்சுத் திணறும் பெங்களூர்
பெங்களூர்: வாகனங்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துவிட்ட பெங்களூரில் க்ரீன் ஹவுஸ் கேஸஸ் எனப்படும் சுற்றுச்சூழலை பெருமளவில் பாதிக்கும் வாயுக்கள் வெளியேறுவது கற்பனைக்கு எட்டாத அளவுக்கு அதிகரித்துவிட்டது தெரியவந்துள்ளது.
என்சென் குளோபல் சொல்யூசன்ஸ் என்ற நிறுவனத்துடன் இணைந்து கர்நாடக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய ஆய்வில் இது உறுதியாகியுள்ளது.
கடந்த 10 வருடத்தில் பெங்களூரில் வாகனங்களின் எண்ணிக்கை 3 மடங்கு அதிகரித்துவிட்டது. இதனால் கார்பன் மோனாக்ஸைட், கார்பன் டை ஆக்ஸைட் உள்ளிட்ட சுற்றுச்சூழலுக்கும் உடல் நலத்துக்கும் பெரும் கேடு விளைவிக்கும் வாயுவின் அடத்தில் பெருமளவு அதிகரித்துள்ளது.
இதற்கு இரண்டு சக்கர வாகனங்களும், டீசலில் இயங்கும் கன ரக வாகனங்களுமே மிக முக்கிய காரணம் எனத் தெரியவந்துள்ளது.
இது தவிர மீத்தேன், நைட்ரஸ் ஆக்ஸைட் உள்ளிட்ட விஷ வாயுக்களின் அளவும் மிக வேகமாக அதிகரித்து வருகிறது.
பெங்களூரில் மிக மோசமான சாலைகள், குறுகலான சாலைகள் ஆகியவற்றால் 2,3வது கியர்களிலேயே வாகனங்களை ஓட்டும் நிலை உள்ளது தான் இந்த வாயுக்கள் அதிக அளவில் உற்பத்தியாவதற்கபக் காரணம் என என்சென் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் உமா ராஜரத்தினம் கூறியுள்ளார்.
இப்போதே இந்த வாயுக்களின் அடர்த்தி பெங்களூரில் அபாயகரமான அளவைத் தொட்டுவிட்டது. இதைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காவிட்டால் அடுத்த 10 ஆண்டுகளில் இதன் அளவு இரு மடங்காகும் என்றார் உமா.
ஒரு காலத்தில் மரங்கள் அடர்ந்த, பூங்காக்கள் நிறைந்த க்ரீன் சிட்டியாக இருந்த பெங்களூர் இன்று க்ரீன் ஹவுஸ் கேஸஸ் எனப்படும் கொடிய வாயுக்களை உற்பத்தி செய்வதில் முன்னணி இடத்தைப் பிடித்துள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications