தென்காசி மத மோதல்-அரசு மெத்தனம்: கிருஷ்ணசாமி
தென்காசி: தென்காசியில் கடந்த 3 வருடங்களாகவே மத மோதல்கள் நடந்து வரும் நிலையில் அரசு மெத்தனமாக இருப்பது கண்டனத்துக்குரியது என்று புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
தென்காசியில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், பிப்ரவரி 24ம் தேதி மதுரையில் புதிய தமிழகம் கட்சியின் 17ம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி மாநாடு நடைபெறவுள்ளது. இம்மாநாட்டில் அகில இந்திய சமூக நீதி தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.
தென்காசியில் கடந்த 2,3 ஆண்டு காலமாகவே தொடர்ந்து மத மோதல்கள் இருந்து வருவது வருத்தம் அளிக்கிறது. மத, ஜாதி மோதல்கள் எவ்விதத்ததிலும் சமுதாயத்திற்கு முன்னோற்றம் அளிக்காது. இரு பிரிவு மோதல்களை நிரந்தரமாக தீர்க்காமல் இந்த அரசு காவல்துறையை வைத்து தீர்க்க நினைப்பது அறிவுபூர்வமானது அல்ல. அரசின் மெத்தனப் போக்கு கண்டிக்கத்தக்கது.
நிரந்தர தீர்வு ஏற்பட அரசு நடவடிக்கை எடுக்கைவில்லையெனில் புதிய தமிழகம் அந்த பணியை செய்யும்.
வடக்கு வாழ்கிறது. தெற்கு தேய்கிறது என்று கோஷமிட்டு ஆட்சிக்கு வந்தவர்கள் தென் தமிழகத்தை தேய வைத்து விட்டார்கள். தமிழகத்தில் புதிதாக 39 தொழிற்சாலைகள் தொடங்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. அதில் திருச்சிக்கு தெற்கே எதுவும் இல்லை.
தென் மாவட்டத்தில் புகழ் பெற்ற தென்காசியை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம் அமைக்க நடைபெறும் சட்ட மன்ற தொடரிலேயே அறிவிக்க வேண்டும். இல்லையெனில் போராட்டம் நடத்தப்படும்.
பல்வேறு வாக்குறுதிகளை கூறி ஆட்சிக்கு வந்த அரசு அதனை நிறைவேற்றாமல் ஏமாற்றி வருகிறது. வாக்குறுதியை அரசியல் சாசன முறைபடி நிறைவேற்ற வேண்டும். அதுதான் நாணயமான செயல்.
தென்காசி எம்பியாக உள்ள அப்பாத்துரை பல வாக்குறுதி கொடுத்தார். ஆனால் அவரும் நிறைவேற்றவில்லை. விரைவில் தென்காசி மாவட்ட மக்களுக்காக மாபெரும் மக்கள் இயக்கம் தொடங்க உள்ளேன் என்றார்.
-
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்!












Click it and Unblock the Notifications