சென்னை விமான நிலையத்தில் திருப்பி அனுப்பப்பட்ட இலங்கை எம்பி
சென்னை: விமானம் மூலம் தமிழகம் வந்த இலங்கையின் தமிழ் ஈழ விடுதலை அமைப்பு கட்சியின் எம்பியான நித்யானந்தம் உதயகுமார் விமான நிலையத்திலேயே தடுக்கப்பட்டு குடும்பத்தினருடன் திருப்பி அனுப்பப்பட்டார்.
இலங்கை தமிழர் கட்சிகளில் முக்கியமான இந்தக் கட்சிக்கு 4 எம்பிக்கள் உள்ளனர். இந்தக் கட்சியின் பொதுச் செயலாளராக உள்ள நித்யானந்தம் உதயகுமார் எம்பியும் ஆவார்.
இவர் சென்னையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வியாழக்கிழமை இரவு ஏர்லங்கா விமானத்தில் மனைவி, 3 குழந்தைகளுடன் சென்னை வந்தார்.
ஆனால், விமான நிலையத்தில் இவர்களது ஆவணங்களை சரி பார்த்த குடிமைத்துறை அதிகாரிகள் உதயகுமாருக்கு அனுமதி மறுத்தனர். மனைவி, குழந்தைகள் வேண்டுமானால் சென்னைக்குள் நுழையலாம். உங்களுக்கு அனுமதியில்லை என்று கூறிவிட்டனர்.
இதையடுத்து அவர் தனது குடும்பத்தினருடன் அடுத்த விமானத்திலேயே கொழும்பு திரும்பிவிட்டார்.
நித்தியானந்தம் உதயகுமாருக்கு விடுதலைப் புலிகளடன் நெருங்கிய தொடர்பு உள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இது குறித்து தமிழ் ஈழ விடுதலை அமைப்பு கட்சியின் எம்பியும் முக்கிய தலைவருமான சிவாசிலிங்கம் கூறுகையில்,
இலங்கை அரசால் அங்கீகரிக்கப்பட்ட கட்சியின் எம்பியான உதயகுமார் குடும்பத்துடன் தமிழகத்திற்குள் அனுமதி மறுக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டது எதிர்பாராதது. எங்கள் கட்சி ஆரம்பித்ததில் இருந்தே இந்தியாவிற்கு ஆதரவாக உள்ளது குறிப்பிடத்தக்கது என்றார்.
-
கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் என்ன பறக்குது.. போலீசாரை வெகுவாக பாராட்டிய பொதுமக்கள் -
கமல், கார்த்திக் கூடதான் கட்சி ஆரம்பிச்சாங்க! என்னாச்சு? அண்ணாமலைலாம் ஒரு ஆளே இல்லை! முஸ்தபா விமர்சனம் -
சென்னை மெட்ரோ தலைகீழாக மாறப்போகிறது.. ஷாப்பிங் + கொண்டாட்டம்.. ஒரே இடத்தில்! -
பெரம்பூர் ரயில் நிலையத்தில் சூட்கேஸில் தலையில்லாத சடலம்! மனைவி, ஆண் நண்பரை தட்டி தூக்கிய தனிப்படை -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர்












Click it and Unblock the Notifications