பொலிவு பெறும் மீனாட்சி அம்மன் கோவில்

சென்னை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் இயற்கைத் தன்மை மாறாமல் கோவில் அழகுபடுத்தப்படும் என்று சட்டசபையில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் பெரியகருப்பன் கூறியுள்ளார்.
சட்டசபையில் இன்று கேள்விநேரத்தின்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் நன்மாறன் இதுகுறித்து எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் பெரியகருப்பன் பதிலளிக்கையில், மீனாட்சி அம்மன் கோவில்களின் சில பகுதிகளில் ஏற்பட்டுள்ள விரிசல்களை சரி செய்யும் பணிக்காக அரசு ரூ. 5 கோடி நிதியை ஒதுக்கியுள்ளது. இதன் மூலம் கோவிலின் கலை மற்றும் சிற்பங்கள் பாழ்படாமல் பாதுகாக்கப்படும்.
இதுதவிர கோவிலில் மேற்கொள்ளப்படும் அனைத்து விதமான மராமத்து பணிகளும் ஆறு மாதத்திற்குள் முடிக்கப்படும்.
கோவிலின் மேற்கூரைகளில் உள்ள விரிசல்கள் நீக்கப்படும். அவற்றுக்குப் பதில், புதிய கற் கூரைகள் பொருத்தப்படும். இந்தக் கூரைகள், பெங்களூரிலிருந்து கொண்டு வரப்படவுள்ளன.
மேலும், கோவிலின் புகழ் பெற்ற தங்கத் தாமரைக் குளம் நிரந்தரமாக நீரால் நிரப்பப்படும். அதற்கான பணிகளும் நடந்து வருகின்றன.
மேலும் மழைக்காலத்தில் கிடைக்கும் மழை நீரை உபயோகமான முறையில் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் நிரந்தர மழை நீர் வடிகால் வசதியை கோவிலைச் சுற்றிலும் ஏற்படுத்துவற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய 9 என்ஜீனியர்களைக் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
மழைக்காலத்தில் கோவிலுக்குள் தண்ணீர் தேங்குவதைத் தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்றார் பெரியகருப்பன்.
-
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications