காமராஜர், சரத்குமார் கட்-அவுட் மீது சாணம் வீச்சு: பதற்றம்
திருநெல்வேலி: திருநெல்வேலி அருகே காமராஜர் மற்றும் சரத்குமார் கட்-அவுட்கள் மீது சாணம் வீசப்பட்டதால் அங்கு பெரும் பதற்றம் நிலவுகிறது.
நெல்லை அருகே முக்கூடலில் உள்ள புனித சின்னப்பர் ஆலய திருவிழா ஒவ்வொரு வருடமும் சிறப்பாக நடக்கும். அதில் பல ஆரக்கணக்கான மக்கள் கலந்து கொள்வார்கள். இந்த விழாவுக்கு வருபவர்களை வரவேற்கும் விதமாக அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில் பெருந்தலைவர் காமராஜர் மற்றும் சரத்குமார் ஆகியோருக்கு கட்-அவுட்கள் வைக்கப்பட்டன.
நேற்று நள்ளிரவில் அந்த கட்-அவுட்கள் மீது யாரோ மர்ம நபர்கள் சாணியை வீசி அவமரியாதை செய்துள்ளனர்.
இன்று காலை இதை கண்டு கொதித்துப் போன அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியினர் இந்த கேடுகெட்ட செயலைச் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி முக்கூடல் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். மேலும் திடீர் சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் சில மணி நேரம் பஸ் நிறுத்தப்பட்டது.
அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி குற்றவாளிகளைப் பிடிப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். இச் சம்பவம் குறித்து சேரன்மாதேவி போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications