போலி தடுப்பூசி முகாம் நடத்திய வாலிபர்

நாகர்கோவில்: நாகர்கோவில் அருகே போலியாக தடுப்பூசி முகாம் நடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் மாவட்டங்களின் புறநகர் பகுதிகளில் போலி மருத்துவர்கள் புற்றீசல் போல் பரவியுள்ளனர்.
இந்நிலையில் நெல்லையைச் சேர்ந்த ஒரு கும்பல் கிராமம் கிராமமாக சென்று மஞ்சள் காமாலை, டைபாய்டு மூளைக்காய்ச்சல் போன்ற நோய்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு போலியாக மருத்துவ தடுப்பூசி முகாம் நடத்தி வந்தது தெரிய வந்துள்ளது.
நெல்லை டவுனை சேர்ந்த அந்தக் கும்பல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று முறையாக அரசின் அனுமதி பெறாமல் குழந்தைகளுக்கு மஞ்சள் காமாலை தடுப்பூசி, டைபாய்டு, மூளைக்காய்ச்சல், போன்றவற்றிக்கு போலியாக தடுப்பூசி முகாம் நடத்தி வருகிறது.
தடுப்பூசி முகாம் நடத்துபவர்கள் அந்தந்த சுகாதார பணிகள் துணை இயக்குனரின் அனுமதி பெற்று பயிற்சி பெற்ற டாக்டர் முன்னிலையில் பயிற்சி பெற்றவர் தடுப்பூசி போட வேண்டும். ஆனால் இந்த கும்பல் அனுமதி பெறாமல் முகாம்களை நடத்தி வருகின்றனர்.
இதற்காக ஒரு டிரஸ்ட் பெயரில் அட்டை வைத்து கொண்டு அதை கிராமங்கள்தோறும் கொடுத்து பதிவு கட்டணமாக ரூ.10 வசூலிக்கின்றனர். பின்பு தடுப்பூசிக்கு தனியாக பணம் வசூலிக்கின்றனர்.
இதன் மூலம் குழந்தைகளின் உடல் நலமும் பாதிக்கப்படுவதாக பொது நல அமைப்புகள் மூலம் அரசுக்கு புகார்கள் வந்தன.
இந் நிலையில் நாகர்கோவில், பார்வதி புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஒரு டிரஸ்ட் சார்பில் நேற்று தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. இந்த முகாம் அனுமதி பெறாமல் நடத்தப்பட்டதாகவும், பிளஸ் டூ படித்தவர் தடுப்பூசி போட்டு பணம் வசூலித்ததாகவும் வடசேரி போலீசில் நுகர்வோர் அமைப்பை சேர்ந்த சுவாமிதாஸ் என்பவர் புகார் செய்தார்.
இதையடுத்து சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் ரால்ப் செல்வின் விசாரணை நடத்தினார். இதையடுத்து மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெறாமல் தடுப்பூசி முகாம் நடத்தி ஊசி போட்டதாக சேலம் அம்மாபேட்டையை சேர்ந்த ஜெயராமன் என்பவரை வடசேரி போலீசார் நேற்று கைது செய்தனர். இதைப் பார்த்ததும் அங்கிருந்த 2 நர்சுகளும், முகாமை நடத்தியவரும் தப்பியோடிவிட்டார்.
போலி ஊசி போடும் இந்த கும்பல் ஏற்கனவே நெல்லை மாவட்டத்தில் நெல்லை சந்திப்பு, மேலப்பாளையம், நாங்குநேரி பகுதிகளில் முகாம்களை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications