இலங்கையில் ராணுவத் தாக்குதலில் 11 மாணவர்கள் உள்பட 17 பேர் பலி
கொழும்பு: இலங்கையின் மடு பகுதியில், நேற்று இலங்கை ராணுவம் நடத்திய தாக்குதலில் 11 பள்ளி மாணவ, மாணவியர் 17 பேர் உயிரிழந்ததாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையிலான கடும் சண்டையில் இரு தரப்பிலும் பெருத்த உயிர்ச்சேதம் ஏற்பட்டு வருகிறது. இடையில் சிக்கி பல அப்பாவிகளும் அதிக அளவில் உயிரிழந்து வருகின்றனர்.
இந்த நிலையில் மடு என்ற இடத்தில் நேற்று பள்ளிப் பேருந்தின் மீது இலங்கை ராணுவத்தின் ஆழ் ஊடுறுவுப் பிரிவினர் நடத்திய தாக்குதலில் 11 பள்ளிக் குழந்தைகள் உள்ளிட்ட 17 பேர் இறந்துள்ளதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.
விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள மடு அருகே உள்ள தாட்சாணமருதமடு என்ற இடத்தில் பள்ளிக் குழந்தைகளை ஏற்றிக் கொண்டு சின்ன பாண்டிவிரிச்சான் பள்ளிக்கூடத்தின் பேருந்து ஒன்று மது சர்ச் என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தது. இப்பேருந்து பாலம்பிட்டி என்ற இடத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது.
அப்போது இலங்கை ராணுவம் வைத்திருந்த கண்ணிவெடி வெடித்தது. இதில் பேருந்தில் இருந்த 11 குழந்தைகள், 2 ஆசிரியர்கள், பள்ளிக்கூட முதல்வர் உள்பட 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 17 பேர் படுகாயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள் உடனடியாக பள்ளமேடு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். காயமடைந்தவர்களில் 7 குழந்தைகளின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக புலிகள் தெரிவித்துள்ளனர்.
ஆனால் இதை ராணுவம் மறுத்துள்ளது. அப்பகுதி புலிகள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதி. எனவே அங்கு என்ன நடந்தாலும் அதற்கு புலிகளே பொறுப்பு என ராணுவம் தெரிவித்துள்ளது.
முக்கிய புலிகள் தளம் பிடிபட்டது
இதற்கிடையே, மன்னார் மாவட்டத்தில் புலிகள் வசம் இருந்து வந்த வியட்டான்குளம் என்ற முக்கிய இடத்தை ராணுவம் பிடித்துள்ளது.
இப்பகுதியில் நடந்த கடும் சண்டையில் 22 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர். அவர்களின் 16 பதுங்கு குழிகள் அழிக்கப்பட்டன.
வெளிஓயா பகுதியில் ராணுவம் நடத்திய தாக்குதலில் 9 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர் என்று ராணுவம் தெரிவித்துள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications