ராமர் பாலத்திற்குச் சுற்றுலா சென்ற 4 படகுகள் பறிமுதல்
ராமேஸ்வரம்: சர்ச்சைக்குரிய ராமர் பாலத்திற்கு சுற்றுலாப் பயணிகளைக் கூட்டிச் சென்ற நான்கு படகுகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
ராமர் பால விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பான விவாதப் பொருளாக இருந்து வரும் நிலையில், அதை சுற்றுலா தலமாக மாற்றியுள்ளனர் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த சில படகு உரிமையாளர்கள்.
ராமேஸ்வரத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகளிடம் ராமர் பாலத்தைக் காட்டுவதாக கூறி படகுகளில் அழைத்துச் சென்று எதையாவது ஒன்றைக் காட்டி இதுதான் ராமர் பாலம் என்று கூறி பணம் கறந்து வரும் செயல் அங்கு நடந்து வருகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் தனுஷ்கோடியில் இருந்து 8 வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ராமர் பாலத்தைக் காட்டுவதாக கூறி மீனவர் ஒருவர் படகில் அழைத்துச் சென்றார்.
இதேபோன்று பாம்பன் பகுதியைச் சேர்ந்த 27 மாணவர்களை ஏற்றிக் கொண்டு இன்னொரு படகு மன்னார் வளைகுடா பகுதியில் உள்ள தீவு கூட்டங்களுக்கு அழைத்துச் சென்றுள்ளது.
மேலும் 2 படகுகளில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ராமர் பாலத்தை பார்ப்பதற்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இது பற்றி தகவல் அறிந்த போலீசார், கடற் படையினரோடு விரைந்து சென்று அந்த 4 படகுகளையும் பறிமுதல் செய்தனர்.
அனுமதியின்றி ராமர் பாலம் பகுதியில் நுழைந்ததாக அவர்கள் மீது புகார்கள் பதிவு செய்யப்பட்டது. அந்த படகுகளின் உரிமம் ரத்து செய்யப்பட்டதோடு, அந்த படகுகளுக்கு வழங்கப்பட்ட டீசல் கோட்டா உரிமமும் ரத்து செய்யப்பட்டது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications